பள்ளி மாணவி,மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்..! என்ன பார்க்கலாம் வாங்க ?

பள்ளி மாணவி,மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்..! என்ன பார்க்கலாம் வாங்க ?
By: punnagainews Posted On: April 07, 2025 View: 90

பள்ளி மாணவி,மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்..! என்ன பார்க்கலாம் வாங்க ?

தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி.

தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இம் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 06.04.2025 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர விருப்பமுள்ள 6-ஆம். 7-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்புகளில் சேர விரும்பும் 13 வயதிற்க்குட்பட்ட மாணவ, மாணவிகள் ஆன்வைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கான கடைசி நாள்: 30.04.2025 அன்று மாலை 5.00 மணி வரை ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசியினை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரத்தினை பெற்று கொள்ளலாம்.

முதன்மை நிலை விளையாட்டு மையத்தில்/ சேர விரும்பும் மாணவ / மாணவியருக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகின்ற 02.05.2025 அன்று காலை 7.00 மணியளவில் கீழ்காணும் விபரப்படி நடைபெற இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான தகவல்கள் குறுச்செய்தி. வாட்ஸ்ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

1. தடகளம்(ஆ) & (பெ), குத்துசண்டை(ஆ) பளுதூக்குதல் (ஆ) - ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை
2. டென்னிஸ் (பெ) - நுங்கம்பாக்கம். விளையாட்டரங்கம், சென்னை,
3. ஜிம்னாஸ்டிக்ஸ்(ஆ)& (பெ), நீச்சல் (ஆ) & (பெ) - AGB நீச்சல் குசு வளாகம், வேளச்சேரி, சென்னை
4. வில்வித்தை (ஆ), சைக்கிளிங்(ஆ)&(பெ). இறகுபந்து(ஆ) & (பெ) - TNPESU, மேலக்கோட்டையூர், செங்கல்பட்டு.
மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் : 02.05.2025, காலை 7.00 மணி (*ஆ -ஆண்கள், பெ -பெண்கள்,)

தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில (ம) மாவட்ட அளவில் குடியரசு / பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் / அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் சங்கங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும், (அல்லது) தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் / இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGF) / இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு மற்றும் பதங்கங்கள் பெற்றவர்களும் மாநில (ம) மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற ஆவார்கள்.

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos