இன்றைய ராசி பலன்கள் - செப்டம்பர்-02-2024

இன்றைய ராசி பலன்கள் - செப்டம்பர்-02-2024
By: No Source Posted On: September 02, 2024 View: 753

இன்றைய ராசி பலன்கள் - செப்டம்பர்-02-2024

இன்றைய ராசி பலன்கள் - செப்டம்பர் 02 2024 திங்கட்கிழமை

 

இன்று காலை 06.32 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.


இன்று முழுவதும் மகம்.


உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.


சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.


மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

 

மேஷம்


ஓடி ஓடி உழைத்த பணத்தை ஒருமுகப்படுத்த முயற்சி செய்வீர்கள். வேறு ஒருவரின் பெயரில் உள்ள உங்கள் நிலப்பட்டாவை மாற்றுவீர்கள். தொழில் போட்டிகளை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களின் மூலம் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் அதிரடியான லாபம் பார்ப்பீர்கள்.

 

ரிஷபம்


அலுவலகத்தில் நீங்கள் பட்ட சிரமங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வருவீர்கள். சங்கடப்பட்ட மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் வளர்த்து கொள்வீர்கள். பலகாலம் தடைபட்ட இடமாற்றம் கிடைத்து வேறு ஊருக்கு செல்வீர்கள். இல்லத்தில் இதுவரை இருந்த மந்த நிலையை மாற்றுவீர்கள். காதலியின் மனதை ஈர்க்க கணிசமான பணத்தை செலவு செய்வீர்கள்.

 

மிதுனம்


மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் சிக்கலான வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் திறமையைப் பார்த்து சிலர் பொறாமைப்படுவார்கள். வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி லாபத்தைப் பெருக்குவீர்கள். சினமூட்ட நினைத்தவர்களை சிரிப்புடன் ஜெயிப்பீர்கள். நில விற்பனைத் தொழில், மணல், செங்கல் வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

 

கடகம்


தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்காக உத்தரவாதக் கடிதம் கொடுக்காதீர்கள். தவறான வழிகாட்டுதலுக்கு அவசரப்பட்டு தலை ஆட்டாதீர்கள். அதனால் கை பொருளை இழப்பீர்கள். குடும்பத்தில் பொறுப்புடனும் பொறுமையுடனும் செயல்படுவீர்கள். அவசிய தேவைக்காக நெருங்கிய நண்பரிடம் கடன் வாங்குவீர்கள்.

 

சிம்மம்


சுபகாரியத் தடைகளை நீக்கி சொந்தங்களை ஒன்று சேர்ப்பீர்கள். வியாபாரத்தில் மந்த நிலையை எதிர் நோக்குவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள். நிலம் வாங்கும்போது வில்லங்கம் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள மறக்காதீர்கள். ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடாதீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவுகள் செய்வீர்கள்.

 

கன்னி


உங்கள் உழைப்புக்குப் பரிசாக அலுவலகத்தில் உன்னத உயர்வை அடைவீர்கள். வேலையிடத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். சுணங்கிக் கிடந்த வீட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடத்துவீர்கள். காதலியுடன் வெளியூர் செல்வீர்கள். அடுத்தவருக்குச் செய்யும் உதவியால் வெளிவட்டாரச் செல்வாக்கை உயர்த்தி கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர்கள்.

 

துலாம்


தொழிலை மேம்படுத்த நீங்கள் கேட்ட உதவிகளை தடையில்லாமல் பெறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை குறைந்து நிம்மதி அடைவீர்கள். முதலாளியின் அன்பை பெறுவீர்கள். கட்டுமானத் தொழிலில் முத்திரை பதிப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் நீங்கள் ஓங்கி நிற்பீர்கள். அரசு வேலையில் புதிய ஒப்பந்தம் பெறுவீர்கள். சேமிப்பை உயர்த்துவீர்கள்.

 

விருச்சிகம்


முன்பு நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு இன்று தீர்வு காண்பீர்கள். திடீரென்று வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை நிலவி வந்த குழப்பமான சூழ்நிலையை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கத்தை பார்ப்பீர்கள். சிறு தொழில் வியாபாரிகள் அனுகூலம் பெறுவீர்கள். முழங்கால் வலிக்கு ஸ்கேன் எடுத்து மருத்துவ சிகிச்சை பெறுவீர்கள்.

 

தனுசு


எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தால் அவமானப்படுவீர்கள். உங்கள் அவசரத்திற்கு அரசாங்க வேலைகள் நடக்காமல் அவதிப்படுவீர்கள். பைல்களில் கையெழுத்துப் போடும்போது நிதானமாகப் படித்துப் பார்க்கத் தவறாதீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யாதீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையுடன் இருங்கள்.

 

மகரம்


அரசு வேலையில் சட்டத்தை மீறி நடக்காதீர்கள். அதனால் சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். ஆடம்பரச் செலவால் சேமிப்பை கரைப்பீர்கள். மனைவியின் மனக்குறையை போக்கி சந்தோஷத்தை நிலை நாட்டுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பீர்கள். யாரையும் மட்டம் தட்டிப் பேசி வினையை விலைக்கு வாங்காதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

 

கும்பம்


உங்கள் மனதில் இருந்த இனம்புரியாத பயம் விலகி ஊக்கமடைவீர்கள். உடன் வேலை செய்வோரின் ஒத்துழைப்பால் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்கள் நல்ல செய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். புதிய தொழில் தொடங்க திட்டம் போடுவீர்கள்.

 

மீனம்


பிள்ளைகளின் நடவடிக்கையை அணுக்கமாகக் கண்காணிக்க தவறாதீர்கள். அவர்களின் படிப்புக்காக பழைய சேமிப்பைப் பயன்படுத்துவீர்கள். ஐடி ஊழியர்கள் அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். விரும்பிய பெண்ணிடம் அரும்பிய காதலை வெளிப்படுத்தி ஆனந்தம் அடைவீர்கள்.

Tags:
#rasi palan  # ராசி  # இன்றைய ராசி பலன்கள்  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos