'ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும், காங்கிரசிற்கும் தொடர்பு உள்ளது' - ரவிசங்கர் பிரசாத்
அதானி நிறுவனம் குறித்து, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ரவிசங்கர் பிரசாத் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது,
பங்கு சந்தையை சீர் குலைக்க சதி நடக்கிறது. பங்குசந்தை சரிவடைந்தால் சிறு முதலீட்டாளர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.
காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி தலைவர்கள் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க சதி செய்கின்றனர்.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் காங்கிரசிற்கும் தொடர்பு உள்ளது.
மோடி வெறுப்பு
செபி தலைவர் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிகள் நடக்கின்றன.
காங்கிரசின் மோடி வெறுப்பு தற்போது இந்தியா வெறுப்பாக மாறியுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக சதி நடைபெறுகிறது.
பெகாசஸ் ஊழல் வழக்கின் போது உச்சநீதிமன்றம் ராகுலின் போனை கேட்டது, அவர் தரவில்லை.
அந்த போனில் என்ன இருந்தது, எதை மறைக்கப் பார்த்தார் ராகுல்?
மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததை காங்கிரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்த போதும் இது போன்ற அறிக்கைகள் வெளியாகாதது ஏன்?
செபி அனுப்பிய நோட்டீஸ் குறித்து, இதுவரை ஹிண்டன்பர்க் பதில் அளிக்கவில்லை.
பதில் அளிக்க ஏன் மறுக்கிறது என்பது குறித்து தெரியவில்லை என அவர் கூறினார்.
Tags:
#Ravi Shankar Prasad
# SEBI
# Madhabi
# Hindenburg