அதானி முறைகேடு கருத்துக்கு கங்கனா காட்டம் - ராகுல் காந்தி ஆபத்தானவர்!

அதானி முறைகேடு கருத்துக்கு கங்கனா காட்டம் - ராகுல் காந்தி ஆபத்தானவர்!
By: No Source Posted On: August 12, 2024 View: 9979

அதானி முறைகேடு கருத்துக்கு கங்கனா காட்டம் - ராகுல் காந்தி ஆபத்தானவர்!

 

ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி விமர்சித்து இருந்தார்.

 

இந்தநிலையில் பா.ஜனதா எம்.பி.யுமான கங்கனா ரணாவத் "ராகுல் காந்தி மிகவும் ஆபத்தானவர்" என்று தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது,

 

ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர்.

 

 

அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த நாட்டை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக இருக்கிறது.

 

நமது பங்குச் சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பெர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்று இரவு உறுதியானது.

 

இந்த நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க அவர் எல்லா முயற்சிகளையும் செய்கிறார்.

 

நீங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள்.

 

நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள்.

 

நீங்கள் ஓர் அவமானம், என்று பாஜக எம் பி கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

Tags:
#Rahul Gandhi  # Kangana Ranaut  # Hindenburg  # Madhabi Puri Buch  # SEBI 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos