
நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
வார விடுமுறையையொட்டி, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, நாகர்கோவில் - தாம்பரம் இடையேயான சிறப்பு ரெயிலானது, நாகர்கோவிலில் இருந்து 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு இயக்கப்பட உள்ளது.
மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 19, 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 03.30 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Tags:
#Special Trains
# Southern Railways
# Indian Railways
# Tambaram to Nagarkovil