ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்? சஞ்சு சாம்சன் அளித்த பதில்!

ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்? சஞ்சு சாம்சன் அளித்த பதில்!
By: No Source Posted On: August 10, 2024 View: 79

ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்? சஞ்சு சாம்சன் அளித்த பதில்!

 

இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்திருந்தார். ஆனால் ஒருநாள் தொடருக்கான அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை.

 

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து செய்தியாளர் ஒருவர் சஞ்சு சாம்சன் கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு பதில் அளித்து சாம்சன் கூறியதாவது, அவர்கள் என்னை அழைக்கும் போது நான் விளையாட செல்ல வேண்டும்.

 

அழைக்கவில்லை என்றால் பரவாயில்லை.

 

அணி நன்றாக செயல்படும் போது அதைப்பற்றி நான் அதிகமாக சிந்திக்கக்கூடாது.

 

நான் நேர்மறையாக இருந்து என்னால் என்ன செய்ய முடியுமோ அதில் கவனம் செலுத்துகிறேன்.

 

அதே சமயம் கடினமாக உழைத்து என்னுடைய ஆட்டத்தை முன்னேற்றுவதற்கு அதிகப்படியான பயிற்சிகளை எடுக்கிறேன்.

 

அந்த வகையில் என்னுடைய கெரியரை நான் முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.

 

என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி எனது ஆட்டத்தை முன்னேற்ற விரும்புகிறேன் என்று சஞ்சு சாம்சன் கூறினார்.

Tags:
#Criccket  # Sanju Samson  # T20  # ODI  # BCCI  # IND vs SL  # India Lost 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos