ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி ஆய்வு: கேரளா வயநாட்டில் நிலச்சரிவு!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து வருகிறார்.
அவருடன் கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் உள்ளனர்.
முன்னதாக, பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்துக்கு இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு வந்தடைந்தார்.
அவரை கேரள ஆளுநரும், முதல்வரும் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி வயநாடு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tags:
#Wayanad
# Landslide
# Modi
#