சட்டம் ஒழுங்கு சீர்குலைவா? அமைச்சர் ராகுபதி பதில்...!
தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதால்தான் இங்கு தொழில் செய்வதற்கு பல வெளிநாட்டில் இருந்து நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகிறது
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் கொலைகள் அரசாங்கத்தால் ஏற்பட்டது கிடையாது
ஒருவருக்கொருவர் மீது உள்ள போட்டியால் கொலைகள் நடைபெறுகிறது இதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது என்றாலும் சட்டம் ஒழுங்கு பேணிக்காப்பதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமைச்சரின் பேச்சு ஏற்கனவே சர்ச்சையான நிலையில் மீண்டும் அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குடியில் தமிழக அரசின் சார்பில் சமத்துவபுரம் கட்டுவதற்கான கால்கோள் விழா பூமி பூஜை நடைபெற்றது
இங்கு நூறு வீடுகள் கட்டப்பட்டுள்ளது அனைத்து சமுதாயத்திற்கும் ஒன்றாக வாழ்வதற்கு இது வழிவகுக்கிறது
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆட்சியர் அருணா உள்ளிட்டோர் பூமி பூஜையில் கலந்து கொண்டு கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி
ஒரு ஆட்சியின் மீது குறை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள்
ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று சொல்வது எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையான ஒன்று அது உள்பிரச்சனை, அரசாங்கத்தினால் ஏற்பட்ட எந்த பிரச்சனையும் இல்லை.
முன்விரோதம் காரணமாக மற்ற காரணங்களால் ஏற்பட்ட பிரச்சினைகளால் சில அசம்பாவிதங்களால் படுகொலைகள் நடந்து வருகிறது இவற்றுக்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது என்றாலும் அதை தடுக்க வேண்டியது எங்களுடைய கடமை
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யார் யாரெல்லாம் ரவுடிசம் செய்கின்றார்களோ அவர்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து வந்து கொண்டிருக்கின்றோம்
அதைத்தான் நாங்கள் செய்ய முடியும் ஒவ்வொரு இதயத்தில் இருப்பதை ஊடுருவி பார்க்க முடியாது யார் யாரை கொலை செய்யப் போகிறார்கள் என்று பார்க்க முடியாது
பலிக்கு பலி கொலைகள் நடந்து வருகிறது அதை இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகின்றோம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடக்கி இருக்கின்றார்கள்
இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றம் குறைவு தான் அதனால்தான் தமிழகத்தை அமைதி பூங்கா என்று சொல்லி வருகிறோம்
சில பத்திரிகைகள் கூட இதை விமர்சனம் செய்து வருகிறது
இந்தியாவிலேயே குற்றம் குறைவாக உள்ளது தமிழ்நாடு தான் அதனால் தான் இந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்லி வருகின்றோம் அது ஒன்றும் தவறு கிடையாது
வருகின்ற காலங்களில் நிறைய தொழிற்சாலைகளுக்கான அடிக்கல் நாட்டு விழா தமிழகத்தில் நடைபெற இருக்கின்றது
தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதால்தான் தொழிலதிபர்கள் தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க முன் வருகின்றனர்
அதனால்தான் அமைதி பூங்கா என்று சொல்கிறோம் மறு பேச்சே கிடையாது
என்றார்.
Tags:
#Minister Regupathy
# DMK
# MK Stalin
# TNGOVT
# BSP Armstrong Death
#