இந்த ஒரு ட்ரிங்க் குடிங்க மாதக்கணக்கில் வராத பீரியட்ஸூம் உடனே வரும்
இன்று பெண்கள் பலரும் மாதவிடாய் தள்ளிப் போகும் பிரச்சனையை ஒரு முறையாவது கட்டாயம் அனுபவித்திருப்பர்.
சில சமயங்களில் மாதவிடாய் தள்ளிப்போகலாம் அல்லது மாதவிடாய் இரத்தப்போக்கு வராமல் போகலாம்.
இந்த ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு ஏராளமான காரணங்கள் உள்ளது.
மேலும் இந்த சூழ்நிலையில் பெண்களுக்கு எப்படி பிரச்சனையைக் கையாள்வது என்று தெரிவதில்லை.
இதனால், நிறைய பெண்கள் இந்த மாதவிடாய் பிரச்சனையைக் கண்டு கொள்ளாமல் அப்படியே விடுகின்றனர்.
மாதவிடாய் தள்ளிப்போக காரணம்
பொதுவாக மாதவிடாய் தாமதமாகும் போது கர்ப்பமாக பார்க்கப்படுகிறது.
ஆனால், கர்ப்பத்தைத் தவிர மாதவிடாய் காலங்கள் தாமதமாக வேறு சில காரணங்களும் உள்ளது.
உடல் எடை அதிகரிப்பு காரணமாக மாதவிடாய் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
ஏனெனில் அதிக உடல் எடை உடல் செயல்பாடுகளை மாற்றலாம்.
எனவே ஒழுங்கற்ற மாதவிடாயைச் சரி செய்வதற்கு உடல் எடையைக் குறைப்பது அவசியமாகிறது.
குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் கொடுக்கும் பட்சத்திலும், சில சமயங்களில் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படலாம்.
இது மாதவிடாயைத் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.
பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் மாதவிடாய் சுழற்சி பாதிப்படையலாம்.
எனவே முடிந்த வரை கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மாதவிடாய் உள்ள பெண்கள் அதீத மன அழுத்தமும் மாதவிடாய் சுழற்சியில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
இதற்கு சமநிலையற்ற ஹார்மோன்களை உருவாக்குவதே காரணமாகும்.
மாதவிடாய் சீக்கிரம் வர உதவும் வீட்டு வைத்தியம்
தேவையானவை
புதினா - 3 கைப்பிடி அளவு, எலுமிச்சைச் சாறு - 20 மில்லி லிட்டர், உப்பு - சிறிதளவு அல்லது நாட்டுச்சர்க்கரை - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் புதினாவை அரைத்து, அதில் எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்க வேண்டும்.
பின் விருப்பத்திற்கேற்ப உப்பு அல்லது நாட்டுச்சர்க்கரையைச் சேர்த்து கரைசலை உருவாக்கலாம்.
இது மாதவிடாய் பிரச்சனைக்கு உதவுவதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக அமைகிறது
Tags:
#PCOD
# PCOS
# Periods
# Health Tips