செம்பருத்தி டீ குடித்தால் உடலுக்கு நன்மையா....
செம்பருத்தி குறித்து நிறைய ஆய்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
சீரகம் சாப்பிட்டால்கூட ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று சொல்வோரும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் செம்பரத்தை சாப்பிட்டால் கல்லீரல் பாதிக்கும், குழந்தையின்மைக்குக் காரணமாகும் என்றெல்லாம் சொல்லப்படுபவை தவறான தகவல்கள்.
எனவே, எல்லோருமே செம்பரத்தை டீ எடுத்துக்கொள்ளலாம்.
அதே சமயம், இதை மட்டுமே எடுத்துக்கொண்டால் போதும், சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் குறையும் என்பது சிலர் சொல்வது நிச்சயம் தவறான விஷயமே.
செம்பரத்ரதைப் பூக்களிலும் குடிநீர் தயாரித்து அதில் பனைவெல்லம் சேர்த்து மணப்பாகு தயாரிக்கப்படுகிறது.
இதற்கு உடல் சூட்டையும், உடல் எரிச்சலையும் குறைக்கும் தன்மை உண்டு.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதையும் ஒரு மருந்தாக எடுத்துக்கொள்ளலாம்.
பீரியட்ஸ் பிரச்னை உள்ளவர்களுக்கும் இது உதவும்.
ஒற்றை செம்பரத்தையின் இதழை பால் சேர்த்து எடுத்துக் கொண்டால் ரத்த நாளங்கள் உறுதியாகும்.
இவை குறித்தெல்லாம் கிளினிகல் ஸ்டடி நடக்கவில்லை என்று சொல்கிறார்கள்.
பாரம்பர்யமாகப் பின்பற்றப்படும் இது போன்ற விஷயங்கள் தொடர்பாக ஆய்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
அஞ்சறைப் பெட்டியில் உள்ள சீரகம், சோம்பு என ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு நாள் குடிநீராகத் தயாரித்து அருந்துவது போல செம்பரத்தையையும் ஒரு நாள் பயன்படுத்தலாம்.
அதில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
செம்பரத்தை டீ மட்டுமே சர்க்கரை அளவையோ ரத்த அழுத்தத்தையோ குறைத்துவிடும் என்று நம்பி அதை மட்டுமே சிகிச்சையாகப் பின்பற்றுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
Tags:
#செம்பருத்தி
# Hibiscus
# Health Tips