கூட்டுறவு துறை மூலமாக விவசாயிகளுக்கு முழு அளவில் கடன் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
மேட்டூரில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட நீர் நேற்று காலை முக்கொம்பூர் வந்தடைந்தது இதனை தொடர்ந்து.
இன்று அதிகாலை கல்லணைக்கு வந்தடைந்தது.
நிறை வரவேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் காவிரியில் மலர்கள் மற்றும் விதைநெற்களை தூவி தஞ்சை பாசனத்திற்கான தண்ணீரை கல்லணையிலிருந்து திறந்து வைத்தனர்.
திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அமைச்சர் கே.என்.நேரு
கல்லணைக்கு வந்தடைந்த காவிரி நீரை தற்போது திறக்கப்பட்டு இது காவிரி வெண்ணாறு கொள்ளிடம் கல்லணை கால்வாய் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது.
திறக்கப்பட்ட நீரால் குருவை சாகுபடிக்கும், நிலத்தடி நீர் உயர்வதற்கும், ஏரி, குளங்கள் நிரப்புதற்கும், ஆடி 18 விழாவை கொண்டாடுவதற்கும் பங்கீடு செய்து வழங்கப்படுகிறது.
அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பருவ நிலைக்கேற்ப நீர் பங்கீடு மாற்றி அமைக்கப்படும்.
இன்று திறக்கப்பட்ட காவிரி நீரால் சுமார் 7,95,453 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.
தற்பொழுது ஒன்றேகால் லட்சம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தண்ணீர் வரும் அடிப்படையில் ஒவ்வொரு கால்வாய்களுக்கும் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்படும்.
கர்நாடக முதல்வர் சித்துராமையா சொல்வது போல, மேக்கேதாட்டு குறுக்கே அணைக்கட்ட விடமாட்டோம்.
மத்திய அரசும் அதை அனுமதிக்க முடியாது என்று கூறியிருக்கிறது.
ஏரி, குளங்களில் தற்போது விவசாயிகள் வண்டல் மண் எடுத்து வருகின்றனர்.
ஏரி, குளம், குட்டைகள் தண்ணீர் செல்லும் வரை வண்டல் மண் எடுப்பதற்கு எந்தவொரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
விவசாயிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் விவசாயத்துறை மூலமாக முதல்வர் வழங்கி வருகிறார்.
எனவே இந்த ஆண்டு அதிகமாக விளைச்சல் கிடைக்கும்.
தற்போது திறந்து விடப்பட்ட நீரானது இன்னும் ஒரே வாரத்தில் கடைமடையை சென்றடையும்.
கூட்டுறவுத் துறை மூலமாக வேண்டிய அளவுக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
Tags:
#KN Nehru
# Co-operative Sector
# Farmers
# Credits