தாம்பத்ய ஒற்றுமையை அருளும் கேதாரீஸ்வர விரதம்
கௌதமுனிவர் உமையவளுக்குக் கூறிய விவரம் ''புரட்டாசி மாத வளர் பிறை தசமி திதியில் தொடங்கி,
ஐப்பசி மாத தேய்பிறைச் சதுர்த்தசி அல்லது அமாவாசை வரை 21 நாட்கள் இந்த விரதத்தை நடத்த வேண்டும்.
சிவபெருமானைக் குறித்துச் செய்யப்படும் இந்த விரதத்தை பக்தியுடன் செய்தால், ரிஷப வாகனனான ஸ்வாமி காட்சி தருவார்.
உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்!" என்றார்.
வழிமுறை
பூஜை செய்ய வேண்டிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு, தலை வாழையிலையில் அட்சதையைக் கொட்டிப் பரப்பி, அதன் மேல் பூரண கும்பத்தை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
கும்பத்தில் கேதாரீஸ் வரரை ஆவாஹனம் செய்ய வேண்டும்.
21 இழைகள் - 31 முடிச்சுகள் கொண்ட நோன்புக் கயிறை, அந்தக் கும்பத்தின் மேல் சார்த்தி 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும்.
பூ, பழம் முதலான பூஜைப் பொருட்கள் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
வேத வல்லுநர்கள் 21 பேரை வரவழைத்து, அவர்களைக் கொண்டு பூஜை செய்து வழிபட வேண்டும்.
மனதில் உள்ள விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் விரதம் ஆகும்.
Tags:
#விரதம்
# கேதாரீஸ்வர விரதம்
# ஆன்மிகம்
# Spirituality