தமிழகம் முழுவதும் பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்...
பாஜகவின் அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழகம் சந்தித்த, 2 தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி என,
தமிழக முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகளை முற்றிலும், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது என தி.மு.க.,வினர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று (ஜூலை 27) தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை கிண்டியில் கவர்னர் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,எம்.பிக்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சியில் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரையில் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமையிலும், திருவண்ணாமலையில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடியில் கனிமொழி தலைமையிலும், தேனியில் தங்க தமிழ்செல்வன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர், சேலம் , உள்ளிட்ட பல நகரங்களிலும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கனிமொழி கேள்வி
தமிழகத்தில் இருந்து வரி கொடுக்க மாட்டோம் என சொன்னால் மோடியால் நாட்டை எப்படி வழி நடத்த முடியும்? என கனிமொழி ஆர்ப்பாட்டத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
Tags:
#Budget 2024
# DMK
# MK Stalin
# Kanimozhi
# BJP
# Modi