விரும்பும் மாணவர்களை அழைத்து வர தயார்!

விரும்பும் மாணவர்களை அழைத்து வர தயார்!
By: No Source Posted On: July 26, 2024 View: 5750

விரும்பும் மாணவர்களை அழைத்து வர தயார்!

 

பங்காளதேஷில் இருந்து 4வது நாளாக 42 மாணவர்கள் சென்னை வந்தனர்

 

விரும்பும் மாணவர்களை அழைத்து வர தயார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்

 

தமிழ்நாடு அரசுக்கு மாணவர்கள், பெற்றோர் நன்றி

 

வங்கதேசத்தில் வேலை வாய்ப்பு இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் மற்றும் கலவரம் நடந்து வருகிறது.

 

 

இதனால் இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

 

இந்திய எல்லை அருகே உள்ள நகரங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் தூதரக அதிகாரிகள் முலம் இந்திய எல்லைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

 

பின்னர் அங்கிருந்து அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

 

பங்காளதேஷில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப இயலாத சூழலில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் முலம் வங்கதேசத்தில் உள்ள

 

இந்திய தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைத்து அங்குள்ள தமிழ் மாணவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

 

இதையடுத்து பங்காளதேஷில் இருந்து கடந்த 3 நாளாக 166 மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

 

4வது நாளாக கிருஷ்ணகிரி, கடலூர், தர்மபுரி, தஞ்சாவூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ஈரோடு, விழுப்புரம், தென்காசி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 42 மாணவர்கள் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு செலவில் விமானம் முலம் சென்னை வந்தனர்.

 

சென்னை விமான நிலையம் வந்த மாணவர்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்,

 

அயலகத் தமிழர் நலத்துறை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, துணை கமிஷனர் ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

 

பின்னர் அனைவரையும் அவர்களது சொந்த ஊர்களுக்கு வாகனங்கள் முலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

 

 

பங்காள தேஷில் படிக்க சென்ற மாணவர்களை முதலமைச்சர் உத்தரவிட்டதால் 208 தமிழக மாணவர்களை அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

 

கலவரம், போராட்டம் காரணமாக அச்சத்தினால் வர விரும்பு கூடிய மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். கல்வி தடைப்பட்டு வரவில்லை.

 

போராட்டம் காரணமாக வந்து உள்ளனர். அங்கு சாதாரண நிலை ஏற்பட்டதும் மீண்டும் படிக்க செல்ல கூடும்.

 

பங்காளதேஷில் பதற்ற நிலை மாறி சகஜ நிலைக்கு வருவதாக தகவல் கூறப்படுகிறது.

 

பதற்றத்தில் உள்ள மாணவர்களை அழைத்து வர தாய் உள்ளத்துடன் அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

சென்னை திரும்பிய தேனி மாணவர் கோகுல நாதன் கூறுகையில்,

 

 

பங்காள தேஷில் இருந்து கல்லூரி முலம் எல்லையை கடந்து வந்தோம். தமிழக அரசின் உதவியால் விமான முலம் சென்னை வந்தோம்.

 

மற்ற பகுதியில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

கடலூர் விருத்தாசலத்தை சேர்ந்த மாணவி திவ்யா பிரியா கூறுகையில்,
எங்கள் கல்லூரி அருகே கலவரம் நடந்தது.

 

உடனே கல்லூரி விடுதியில் தங்கி இருந்தோம்.

 

வீட்டை தொடர்பு கொள்ள முடியாத நிலை.

 

தமிழ்நாடு அரசு உதவி மையத்தை தொடர்பு கொண்டதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

 

செங்கல்பட்டு மாணவரின் தந்தை சவுமியன் கூறுகையில்,

 


மலேசியாவில் இருந்து மாணவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் உள்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

 

தமிழக கல்லூரிகளில் அதிக கட்டணமாக இருந்தது.

 

ஆனால் மலேசியாவில் மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் குறைவாக இருந்ததால் அங்கு படிக்க வைக்கிறோம் என்றார்.

Tags:
#Bangladesh  # Students Protest  # Senji Masthan 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos