போதைப்பொருள் கடத்தல் மன்னன் போன்றவர் - சந்திரா பாபு நாயுடு
ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் YSR. காங். கட்சி படுதோல்வி அடைந்தது.
பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.
இங்கு தேர்தல் நேரத்தில் இரு கட்சிகளிடையே அடி, தடி மோதல் வெட்டு,குத்து என வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.
கடந்த சில நாட்களுக்கு முன் டில்லி சென்ற ஜெகன்மோகன் ரெட்டி ஜந்தர் மந்தரில் தர்ணா செய்தார்.
அப்போது தன் கட்சியினர் மீது சந்திரபாபு நாயுடு கட்சியினர் நடத்திய தாக்குதல்கள் குறித்து புகைப்படம்,
வீடியோவை காட்சிக்கு வைத்து ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தவேண்டும் என கூறினார்.
இவரது போராட்டத்திற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று நடந்த சட்டசபை கூட்டதொடரில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியது,
முன்பு ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி, கொலம்பியாவின் புகழ்பெற்ற போதை மருந்து கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபர் போன்றவர்.
பாப்லோ எஸ்கோபர் போதை மருந்து விற்பனையில் கோடி கோடியாக சம்பாதித்தார்.
1976ல் கைது செய்யப்பட்டார். பின்னர் 1980ல் கொலம்பிய அரசியலில் ஈடுபட்டார்.
அவரை போன்று தான் இங்கு முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி, போதை மருந்து விற்பனை செய்து கோடி கோடியாக சம்பாதித்தார்.
இன்று அவரது சொத்து மதிப்பு 90 பில்லியன் டாலர்.
இதன் மூலம் போதை மருந்து விற்றால் பெரும் பணக்காரர் ஆகலாம் என்பதற்கு ஜெகன் மோகன் ரெட்டி உதாரணம், என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரா பாபு நாயுடு பேசினார்.
Tags:
#Chandra Babu Naidu
# Andhra Pradesh
# Chief Minister
# Jagan Mohan Reddy