பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் கருத்து!
பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
இதன்மூலம் அவர் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார்.
காலை 11 மணிக்கு சபை கூடியதும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், இந்த பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது.
கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது.
சாமானிய இந்தியர்கள் எந்தப் பலனும் இல்லாத வகையில் அம்பானி மற்றும் அதானி பலன் தரும் விதமாக உள்ளது.
காங்கிரசின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகளை காப்பி அடித்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள செய்தியில்.
மோடி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட், வேறு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார்.
Tags:
#2024 Budget
# Rahul Gandhi
# Modi
# Nirmala Sitsraman
#