இந்தியா போர்க்கப்பலில் தீ விபத்து..

இந்தியா போர்க்கப்பலில் தீ விபத்து..
By: No Source Posted On: July 22, 2024 View: 2164

இந்தியா போர்க்கப்பலில் தீ விபத்து..

 

'ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா' இந்திய கப்பற்படையின் முக்கியமான போர்க்கப்பல்களில் ஒன்று.

 

 

மும்பையில் உள்ள கப்பற்படை தளத்தில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

 

கப்பலில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

உடனடியாக வீரர்களை மும்பை தீயணைப்புப்படை உதவியுடன் தீணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 

 

கடுமையான போராட்டத்திற்குப்பின் இன்று காலை தீ அணைக்கப்பட்டுள்ளது.

 

கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் மாயமாகியுள்ளார்.

 

கப்பலில் மேலும் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதாக என அதிகாரிகள் கப்பல் முழுவதும் ஆராய்ந்து வருகிறார்கள்.

 

இந்த தீ விபத்தால் கப்பல் ஒரு பக்கம் சாய்ந்து நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா என்பது உள்நாட்டிலேயே கட்டப்பட்ட போர்க்கப்பல்களில் முதன்மையானது.

 

இது ஏப்ரல் 2000-ல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

 

 

கப்பலில் நடுத்தர தூரம், குறுகிய தூரம் மற்றும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

 

மேற்பரப்பில் இருந்து மேற்பரப்பு மற்றும் மேற்பரப்பில் இருந்து மேற்பரப்பு மற்றும் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணைகள் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

 

ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா 27 நாட்டிக்கல் வேகத்தில் செல்லக் கூடியது,
5300 டன் எடை கொண்டது, 125 மீட்டர் நீளமும், 14.4 மீட்டர் அகலமும் கொண்டது.

Tags:
#ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா  # INS Brahmaputra  # Fire Accident  #  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos