06-06-2024 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை, ராசிபலன்கள்.

06-06-2024 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை, ராசிபலன்கள்.
By: No Source Posted On: June 05, 2024 View: 2738

06-06-2024 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை, ராசிபலன்கள்.

06-06-2024

தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, வைகாசி 24
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ அமாவாசை - Jun 05 07:55 PM – Jun 06 06:07 PM

சுக்ல பக்ஷ பிரதமை - Jun 06 06:07 PM – Jun 07 04:45 PM

நட்சத்திரம்

ரோஹிணி - Jun 05 09:16 PM – Jun 06 08:16 PM

மிருகசீரிடம் - Jun 06 08:16 PM – Jun 07 07:43 PM

கரணம்

சதுஷ்பாதம் - Jun 05 07:55 PM – Jun 06 06:58 AM

நாகவம் - Jun 06 06:58 AM – Jun 06 06:07 PM

கிமிஸ்துக்கினம் - Jun 06 06:07 PM – Jun 07 05:23 AM

பவம் - Jun 07 05:23 AM – Jun 07 04:45 PM

யோகம்

த்ருதி - Jun 06 12:35 AM – Jun 06 10:09 PM

சூலம் - Jun 06 10:09 PM – Jun 07 08:04 PM

வாரம்

வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:05 AM
சூரியஸ்தமம் - 6:32 PM

சந்திரௌதயம் - Jun 06 5:31 AM
சந்திராஸ்தமனம் - Jun 06 6:33 PM

அசுபமான காலம்

இராகு - 1:51 PM – 3:25 PM
எமகண்டம் - 6:05 AM – 7:38 AM
குளிகை - 9:11 AM – 10:45 AM

துரமுஹுர்த்தம் - 10:14 AM – 11:03 AM, 03:12 PM – 04:02 PM

தியாஜ்யம் - 12:36 PM – 02:08 PM, 01:44 AM – 03:18 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 11:53 AM – 12:43 PM

அமிர்த காலம் - 05:12 PM – 06:44 PM

பிரம்மா முகூர்த்தம் - 04:29 AM – 05:17 AM

ஆனந்ததி யோகம்

உற்பாதம் Upto - 08:16 PM
மிருத்யு

வாரசூலை

சூலம் - South
பரிகாரம் - தைலம்

____________

வியாழன் ஹோரை

காலை

06:00 - 07:00 - குரு - சுபம்
07:00 - 08:00 - செவ் - அசுபம்
08:00 - 09:00 - சூரி - அசுபம்
09:00 - 10:00 - சுக் - சுபம்
10:00 - 11:00 - புத - சுபம்
11:00 - 12:00 - சந் - சுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சனி - அசுபம்
01:00 - 02:00 - குரு - சுபம்
02:00 - 03:00 - செவ் - அசுபம்

மாலை

03:00 - 04:00 - சூரி - அசுபம்
04:00 - 05:00 - சுக் - சுபம்
05:00 - 06:00 - புத - சுபம்
06:00 - 07:00 - சந் - சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

___________

நாளைய (06-06-2024) ராசி பலன்கள்

மேஷம்

ஜூன் 6, 2024


வெளியிடங்களில் செல்வாக்கு உயரும். கலைத்துறையில் முன்னேற்றம் ஏற்படும். அரசு துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்துவந்த மந்தநிலை மாறும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மாணவர்கள் சற்று கவனத்துடன் இருக்கவும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தெளிவுகள் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : செல்வாக்கு உயரும்.
பரணி : மதிப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
---------------------------------------


ரிஷபம்

ஜூன் 6, 2024


அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வேலையாட்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலைத்துறையில் முயற்சிகள் சாதகமாக அமையும். பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : மதிப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : நுட்பங்களை அறிவீர்கள்.
---------------------------------------


மிதுனம்

ஜூன் 6, 2024


குழந்தைகளின் செயல்களில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். இனம் புரியாத சில எண்ணங்களின் மூலம் தடுமாற்றம் உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.
புனர்பூசம் : தடுமாற்றம் உண்டாகும்.
---------------------------------------


கடகம்

ஜூன் 6, 2024


வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். வாகனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூசம் : பழுதுகள் நீங்கும்.
ஆயில்யம் : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------


சிம்மம்

ஜூன் 6, 2024


புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். துணைவர் வழியில் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். சோர்வுகள் மறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : அபிவிருத்தியான நாள்.
பூரம் : ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திரம் : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------


கன்னி

ஜூன் 6, 2024


முக்கியமான கோப்புகளில் கவனம் வேண்டும். தாயாரின் உடல் நிலையில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். தேவைக்கு ஏற்ப வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். தம்பதிகளுக்கு புரிதல் ஏற்படும். கல்வியில் புதிய தேடல் உண்டாகும். வெளிநாடு செல்வது தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : மாற்றமான நாள்.
சித்திரை : பயணங்கள் சாதகமாகும்.
---------------------------------------


துலாம்

ஜூன் 6, 2024


முக்கியமான விஷயங்களில் பொறுமை காக்கவும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். சுப காரியம் தொடர்பான செயல்களில் அலைச்சல் அதிகரிக்கும். நினைத்த சில பணிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். தடைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : பொறுமை காக்கவும்.
சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
விசாகம் : சோர்வுகள் ஏற்படும்.
---------------------------------------


விருச்சிகம்

ஜூன் 6, 2024


தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வருமான வாய்ப்பை உயர்த்த திட்டமிடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். முயற்சிக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். இன்பம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : வாய்ப்புகள் சாதகமாகும்.
---------------------------------------


தனுசு

ஜூன் 6, 2024


கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுப காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும். பழைய கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். முகத்தில் பொலிவுகள் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்

மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : வருமானம் உயரும்.
உத்திராடம் : மதிப்பு மேம்படும்.
---------------------------------------


மகரம்

ஜூன் 6, 2024


ஆதாரமற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இணையதள பயன்பாடு கல்வியில் அதிகரிக்கும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : பேச்சுக்களை குறைக்கவும்.
திருவோணம் : ஆர்வம் மேம்படும்.
அவிட்டம் : தடைகள் விலகும்.
---------------------------------------


கும்பம்

ஜூன் 6, 2024


துணைவரிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பிடிவாத குணத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் உண்டாகும். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். மனை சார்ந்த பிரச்சனைகள் குறையும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
சதயம் : மாற்றம் ஏற்படும்.
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------


மீனம்

ஜூன் 6, 2024


விருப்பத்திற்கு ஏற்ப வீடு அமையும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். தாய் வழி உறவுகளால் ஆறுதல் ஏற்படும். குழந்தைகளின் ஒத்துழைப்பு மேம்படும். காலம் தவறாமல் உணவு உட்கொள்ளவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : தொடர்புகள் விரிவடையும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

Tags:
#06-06-2024 தமிழ் பஞ்சாங்கம்  # ஹோரை  # ராசிபலன்கள்  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos