
ஒட்டுமொத்த இந்தியாவிலும் பார்க்கும் போது சிறந்த தலைவராக விளங்குபவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் - கமல் கருத்து..!
ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என மநீம தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில்,உச்சநீதி மன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, ஆளுநருக்குத் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் கிடையாது எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைப் பெற்றமைக்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.
மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் மு.க. ஸ்டாலின். அவரைக் கொண்டாட வேண்டியது என் கடமை. நம் கடமை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.