
கோடை மழை - சென்னை மக்கள் மகிழ்ச்சி ...!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று காலை முதல் கோடை மழை பெய்து வருகிறது .
இந்த மழை முலம் வெப்ப தளிர்த்து குளிரிச்சி நிலவுகிறது . பொது மக்கள் ஆனந்தம் அடைந்து வருகிறார்கள்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று சென்னை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது .