மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு - சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு - சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
By: punnagainews Posted On: April 15, 2025 View: 193

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு - சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை அடுத்து இன்று முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கி உள்ளது.

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து இது குறித்து சில விஷயங்களை பற்றி பேசினார்.

இது குறித்து பேசிய அவர் ” தற்போதைய காலகட்டத்தில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. மாநிலங்களின் உரிமைகள் காக்கப்பட்டால் தான் இந்தியா ஒற்றுமையுடன் இருக்கும். ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாசி கொண்ட நாடாகதான் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள்.மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று திமுக தொடர்ந்து முழுங்கி வருகிறது.

முன்னதாக 1974-ல் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜமன்னார் தலைமையில் உயர்மட்ட குழுவை மறைந்த முதலமைச்சர் கலைஞர் அமைத்தார்.இந்த குழுவின் இந்த குழுவின் முக்கிய பரிந்துரைகளை இந்த சட்டப்பேரவையில் தீர்மானமாக கலைஞர் நிறைவேற்றினார்.

இப்போது இந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாநில சுயாட்சியை உறுதி செய்ய ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்து விரிவாக ஆராய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும். திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் நாகநாதன் மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அசோக் வர்தன் செட்டி, இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். 2026 ஜனவரி இறுதிக்குள் இடைக்கால அறிக்கை, 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என இலக்கு” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos