.jpg)
அமைச்சர் பொன்முடி கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், ‘கழக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி அவர்கள், அவர் வகித்து வரும் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்த பேச்சுக்காக பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
இதுகுறித்து திமுக எம்.பியும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’ எனத் தெரிவித்துள்ளார்