
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.- ரசிகர்கள் கொண்டாட்டம்..!
2025 ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 2024 ஐபிஎல் தொடர் முதல் செயல்பட்டு வந்த ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு முழங்கையில் காயம் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதை அடுத்து அவர் 2025 ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதனால் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர். ஏனெனில், அந்த அணி இந்த ஆண்டு இதுவரையே விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து இருக்கிறது.
இந்த நிலையில் தோனி மீண்டும் கேப்டன் ஆனதால் அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என அந்த அணியின் ரசிகர்கள் நம்புகின்றனர். அதனால் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மோசமாக விமர்சித்து வந்தவர்களை எல்லாம் சீண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் சிஎஸ்கே அணி ஆறாவது கோப்பையை வெல்லப்போகிறது எனவும் உற்சாகத்தில் உள்ளனர்