
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் அஜித் 'குட் பேட் அக்லி' இன்று திரைக்கு வந்தது..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் திரிஷா, பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, பிரபு, பிரியா வாரியர், சிம்ரன், ஜாக்கி ஷரோப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இன்று 'குட் பேட் அக்லி' படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி தனது மகளுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் படத்தை பார்க்க சென்றுள்ளார்.