
நீட் தேர்வு வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது.முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!
நீட் விலக்குச் சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது தொடர்பாக சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
நீட் தேர்வு பயிற்சி மையங்களின் நன்மைக்காக, சிலரின் சுயநலனுக்காக கொண்டுவரப்பட்டது.வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு சாதகமாக உள்ளது. பல தரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்திருக்கிறது.
13.09.2021-ல் நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்வடிவை முன்மொழிந்தேன். அதைத் தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு மசோதாவை கவர்னருக்கு அனுப்பி வைத்தோம்.
மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் அரசியல் செய்தார். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக கவர்னர், பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.
08.02.2022-ல் இரண்டாவது முறையாக நீட் விலக்கு சட்ட முன்வடிவு நிறைவேற்றி அனுப்பப்பட்டது. நீட் விலக்கு போராட்டத்தில் அடுத்த கட்டமாக நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தினால் நீட் தேர்வில் நிச்சயம் பெறமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.