
பூமிக்கு திருப்பிய சுனிதா வில்லியம்ஸ் முதன் முதலாக வரவேற்ற டால்பின்கள் ..!
இன்று (மார்ச் 19 ஆம் தேதி) இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணியளவில் அமெரிக்காவின் புளோரிடா கடல்பகுதியில் டிராகன் கேப்சூல் இறங்கியது.
இந்தத் தருணத்தில், ஒரு அற்புதமான நிகழ்வாக, டால்பின்களின் கூட்டம் விண்கலத்தைச் சுற்றி வட்டமடித்தது.
இது நாசாவின் நேரடி ஒளிபரப்பில் பதிவாகி, உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆச்சரியப்படுத்தியது.
இது தொடர்பான வீடியோவை சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் டால்பின்கள் தான் முதலில் அவர்களை வரவேற்றது என்று பகிர்ந்து வருகின்றனர்.
இந்த டால்பின்களின் வரவேற்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினரின் நீண்ட விண்வெளி பயணத்திற்கு ஒரு இயற்கையான மற்றும் அழகிய தருணத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
தற்போது, டிராகன் விண்கலத்தில் வெளியேறிய வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 45 நாள்கள் தொடர் சிகிச்சை, பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.