
சுமார் 2 மணி நேரம் 38 நிமிடம் வரை..! பட்ஜெட் உரையை வாசித்த தங்கம் தென்னரசு..!
தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
சரியாக, காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மு.அப்பாவு திருக்குறள் வாசிக்க கூட்டம் தொடங்கியது.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்.
இந்த நிலையில், 9.32 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையை தொடங்கினார்.
அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேச வாய்ப்பு கேட்டுக்கொண்டே இருந்தனர்.
சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.
தொடர்ந்து பேச அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு தரப்படாததால்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனால், சட்டசபையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து எதிர்கட்சிகளின் அமளிக்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு
பட்ஜெட் உரையை காலை 9.32 மணிக்கு தொடங்கி
மதியம் 12.10 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.
பட்ஜெட் உரையை 2 மணி நேரம் 38 நிமிடம் வரை அவர் வாசித்தார்.