கேட்டது கிடைக்க வேண்டுமா? இந்த ஒரு பொருளை வைத்து வழிபட்டால் போதும்

கேட்டது கிடைக்க வேண்டுமா? இந்த ஒரு பொருளை வைத்து வழிபட்டால் போதும்
By: No Source Posted On: October 17, 2024 View: 328

கேட்டது கிடைக்க வேண்டுமா? இந்த ஒரு பொருளை வைத்து வழிபட்டால் போதும்

வாழ்க்கையில் அனைவருக்கும் பிரச்சனைகள், தேவைகள், மனக்குறைகள் உள்ளது. இது தீர்வதற்கு என்ன வழி உள்ளது? என்ன செய்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என அனைவருமே தீர்வை தேடித் தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு எளிமையான தீர்வு என்று ஒன்று இருக்கும் என்பார்கள்.

 

அப்படி நமக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அவற்றை போக்குவதற்கும், நம்முடைய வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதற்கும் எளிய பரிகாரம் ஆன்மிகத்தில் உள்ளது. இதை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். சிலருக்கு தாமதமாக நடந்தாலும் நிச்சயம் பலன் அளிப்பதாக இந்த பரிகாரம் இருக்கும்.

 

வேண்டுதல்கள் நிறைவேற:

இறைவனிடம் கேட்ட விஷயங்கள் கிடைக்க வேண்டும். நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும். நாம் நினைத்த காரியம் கை கூட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளது. ஆனால் அனைவருக்கும் அப்படி வேண்டிய அனைத்தும் கிடைத்து விடுவது கிடையாது. சிலருக்கு வேண்டுதல் வைத்த சில நாட்களிலேயே கிடைத்து விடும். சிலருக்கு சற்று தாமதமாக கிடைக்கும். இன்னும் சிலருக்கும் பல காலமாக காத்திருந்தாலும் கிடைக்காமல் இருக்கும். அப்படி நினைத்தது நடக்கவில்லை என்பவர்கள் இந்த ஒரு பொருளை வைத்து வீட்டில் இருந்தே, எளிமையான முறையில் பரிகாரத்தை செய்வதால் கண்டிப்பான பலன் கிடைக்கும்.

 

பிரம்ம முகூர்த்தத்தின் மகிமை :

பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யப்படும் வழிபாடு மற்றும் பரிகாரங்களுக்கு வலிமை அதிகம். அதிகாலை 04.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்கிறோம். பிரபஞ்சத்தில் உள்ள இறை சக்திகள் அனைத்தும் ஒரே இடத்தில் கூடி இருக்கும் நேரம் என்பதால், மனதை ஒரு நிலைப்படுத்தி, நாம் முன் வைக்கும் நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் அது நிச்சயம் கை கூடுவதற்கு இறை சக்தி நமக்கு துணை செய்யும். அதனால் தான் சக்தி வாய்ந்த வழிபாடுகள் அனைத்திற்கும் பிரம்ம முகூர்த்த வேளையை பலரும் தேர்வு செய்கிறார்கள்.

 

பிரச்சனைகள் தீர வழிபாடு:

பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து, குளித்து விட்டு, வழிபாட்டினை துவக்குவதற்கு முன் முதலில் குலதெய்வத்தை வேண்டி, உங்களின் பிரார்த்தனை விரைவில் நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டு காணிக்கை முடிந்து வையுங்கள். வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்த பிறகு விநாயகரை மனதார வணங்கி விட்டு, கையில் கல் உப்பினை எடுத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடி உங்களின் கோரிக்கை, வேண்டுதல், பிரார்த்தனை எதுவாக இருந்தாலும் உங்களின் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். தெய்வத்திடம் மனம் விட்டு பேசுங்கள்.

 

பூஜை அறையில் இருக்க வேண்டிய பொருள் :

பிறகு அந்த கல் உப்பினை உங்களின் தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் உப்புடன் கலந்து பயன்படுத்தலாம். அல்லது ஓடும் தண்ணீரிலோ அல்லது வீட்டின் சிங்கிலோ அந்த உப்பினை கரைத்து விடலாம். யாருக்காவது திருஷ்டி சுற்றி போடுவதாக இருந்தால் கூட இந்த உப்பினை பயன்படுத்தலாம். அதே போல் வீட்டின் பூஜை அறையில் ஒரு டப்பா அல்லது கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை வைத்து வழிபடுங்கள். இந்த உப்பினை 3 நாட்களுக்கு ஒரு முறை எடுத்து உங்களின் சமையலுக்கு பயன்படுத்திக் கொண்டு, புதிய உப்பினை மாற்றி வைத்து வழிபடலாம். பூஜை அறையில் சிறிய கண்ணாடி வைத்து, அதற்கு முன்பு கல் உப்பு வைத்து வழிபடுவது இன்னும் சிறப்பானதாகும்.

 

கல் உப்பின் ஆற்றல் :

கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம் என்பது அனைவருக்கும் தெரியும். அதை விட மிக முக்கியமானது நேர்மறை ஆற்றல்களை விரைவில் ஈர்க்கும் தன்மை கொண்டது கல் உப்பு. இதற்கு எதிர்மறை ஆற்றல்களை போக்கும் தன்மையும் உள்ளது. தெய்வீக சக்தியையும், நல்ல விஷயங்களையும் ஈர்த்து, வீட்டில் எப்போதும் தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது கல் உப்பு. இதனை பூஜை அறையில் வைத்து வழிபடுவது, நிலை வாசலுக்கு அருகில் ஒரு வைப்பது, நிலை வாசலில் முடிச்சாக கட்டி வைப்பது ஆகியவை மிகவும் விசேஷமான பலன்களை கொடுக்கும்.

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos