தாலி சரடு மாத்துறீங்களா? பெண்கள் இந்த 5 தப்பை மட்டும் செய்துடாதீங்க..
தாலி கயிறு அல்லது தாலி சரடு மாற்றுவது குறித்து ஆன்மீகத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன... தாலி கயிறுகளை பெண்கள் உகந்த முறையில் அணியும்போது, குடும்பத்தில் வறுமை தங்காது என்பார்கள்.. இதுகுறித்து சுருக்கமாக பார்ப்போம்.
எப்போதுமே தாலிக்கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது.. தாலி கயிற்றினை மாற்ற வேண்டுமானால், சுபதினத்தில், காலை அல்லது மாலையில் மாற்றிக்கொள்ளலாம். ராகு, எமகண்ட காலத்தில் மாற்றக்கூடாது.
கணவர் அல்லது சுமங்கலியாக இருக்கும் அம்மா, மாமியார் என மூத்த பெண்கள் அருகிலிருக்க, கிழக்குப் பக்கமாக உட்கார்ந்துதான் தாலி கயிறு மாற்ற வேண்டும். முக்கியமான விஷயம் கர்ப்பிணிகள் மாற்ற கூடாது. கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு பிறகே மாற்ற வேண்டும்... மற்றபடி யார் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். மஞ்சள், குங்குமம்: புதுத்தாலிக்கும் மஞ்சள் குங்குமம் வைத்து விட்டு, பூஜை அறைக்கு சென்று சாமியை வணங்கிவிட்டு, அதற்கு பிறகுதான் காலை உணவை சாப்பிட வேண்டும்.
புது தாலி மாற்றுவதற்கு திங்கள், செவ்வாய், வியாழன் சிறந்த கிழமையாகும்.. தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ உடனடியாக மாற்றி விட வேண்டும். அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் குடும்பத்தில் வறுமை அதிகமாகும்.
ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிறு மாற்றுவதனால் கணவரின் ஆயுளை அதிகரிக்கும் பலன் கொடுக்கிறது.. நீங்கள் அணிந்திருந்த பழைய கயிற்றை செடி, கொடிகள் இருந்தால் அதில் கட்டிவிடலாம். இல்லையென்றால் அருகில் இருக்கும் கோவிலில் உள்ள மரங்களில் கட்டிவிடலாம்... எக்காரணம் கொண்டும் குப்பையில் பழைய தாலியை தூக்கி போடக்கூடாது.
தாலி சரடுகள்: தாலி சரடுகள் எப்போதுமே 3, 7, 9 என்று ஒற்றைப்படையில் இருக்க வேண்டும்.. எதிர்பாராத விதமாக இரட்டை படையில், இரண்டு பவுன் சரடு வாங்க நேர்ந்துவிட்டால், அதில் ஒரு குண்டுமணி தங்கத்தையாவது சேர்த்துக்கொள்ள வேண்டும். இரட்டை படையில் தாலி சரடு அணிந்தால், கணவன் மனைவிக்குள் தகராறு, சண்டை சச்சரவு வர வாய்ப்புள்ளது.
திருமணமாகி சில மாதங்களுக்கு தாலிக்கயிற்றில் மஞ்சள் சேர்த்தே கட்டப்படும்.. காரணம், இந்த மஞ்சள்தான், தாய்க்கும் சேய்க்கும் பாதுகாக்கும் கிருமிநாசினியாக செயல்படுகிறது.. அதுமட்டுமல்ல, பெண்களின் மார்பகத்தில் தொற்றுக்களை நெருங்க விடாமல் தடுத்து நிறுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோயும் பெண்களை பாதிப்பதில்லை. இதய நோய்களையும் நெருங்க விடுவதில்லை.
இதுதான் முறை: அதனால்தான், தாலியை தங்கத்தில் அணிந்தாலும், மஞ்சள் கயிற்றில்தான் கட்ட வேண்டும் என்பார்கள். எப்போதுமே கழுத்தில் போடப்பட்டிருக்கும் மாங்கல்யம் நெஞ்சு குழிக்கு கீழே தொப்புள் இருக்கும் இடத்திற்கு சற்று மேலே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிலர் தொப்புளுக்கு நேராக அணிந்திருப்பார்கள் இது தவறான முறையாகும்.
Tags:
#ஆன்மீகம்
#