நாளும் மூச்சுப் பயிற்சி.சாதாரண பயிற்சி அல்ல...!
மூச்சுப் பயிற்சி நுரையீரல்களைப் பலப்படுத்தி நல்ல உறக்கம், மன அமைதியைக் கொடுக்கிறது.
மூச்சுப் பயிற்சி என்பது ஏதோ மூச்சை இழுத்து வெளியே விடுவது.இதில் என்ன பெரிய நன்மை கிடைத்துவிடும் என்று நினைத்தால் அது தவறு.
மூச்சுப் பயிற்சி பல்வேறு நோய்களை அண்டவிடாமல் செய்துவிடுகிறது.
குறிப்பாக நுரையீரலை மூச்சுப் பயிற்சி பலப்படுத்துவதால் தொற்றுநோய்கூட தொட முடியாமல் போய்
விடுகிறது.
நாடி சுத்தி, பிராணாயாமம் இரண்டும் மிக முக்கியமான மூச்சு பயிற்சிகள் ஆகும்.
நாடி சுத்தி என்பது பிராணாயாமத்திற்கு உடலை தயார் செய்யும் முறையாகும்.
பிராணாயாமம் என்பது மூச்சை இழுத்து உள் நிறுத்தி பின் வெளிவிடுவது ஆகும்.
இது குறிப்பிட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் செய்யப் படுகிறது.
இதற்கும் முன் நிபந்தனையாக ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடிய நாடி சுத்தியை பழக வேண்டும்.
நாடி என்றால் தாது; அதாவது, ரத்தம். ரத்தத்தை மூச்சின் மூலம் சுத்திகரிக்கும் முறை.
ஒரு நாசியை அடைத்து மற்றொரு நாசி வழி மூச்சை விடும் பயிற்சியாகும்.
அதைச் செய்வதற்கு முன் முதலில் இரண்டு நாசி வழி மூச்சை ஆழமாக இழுத்து பின் வெளிவிடும் பயிற்சியை
சில நாள் பயில்வது நல்லது.
மூச்சுப் பயிற்சி செய்வதால் கிடைக்கும் பொதுவான நன்மைகள்:
நுரையீரலை பலப்படுத்தி, நுரையீரலின் செயல்பாடுகளை செம்மையாக்குகிறது
மூச்சு கோளாறுகளைப் போக்க உதவுகிறது,
ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது,
இதய நலனைப் பாதுகாக்கிறது.
ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது,
ஜீரணக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது,
நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது,
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துகிறது.
மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது,
சரும நலத்தை பாதுகாக்கிறது,
ஆழந்த உறக்கத்தை தருகிறது,
உடலில் இருக்கக் கூடிய நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது,
கவனமின்மையை போக்க உதவுகிறது,
மனதை ஒருநிலைப்படுத்துகிறது,
மன அழுத்தத்தைப் போக்குகிறது,
மன அமைதியை மேம்படுத்துகிறது.
மூச்சுப் பயிற்சிக்கு முறையாக தயார் ஆக வேண்டும்.பத்மாசனம், அர்த்த பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர வேண்டும்.
முதுகை நேராக வைத்து சீராக மூச்சை இழுத்து சீராக வெளியேவிட வேண்டும்.
மூச்சுப் பயிற்சியை முறையாகக் கற்று செய்ய வேண்டும்.