இன்றைய ராசி பலன்கள் - செப்டம்பர்-25-2024

இன்றைய ராசி பலன்கள் - செப்டம்பர்-25-2024
By: No Source Posted On: September 25, 2024 View: 565

இன்றைய ராசி பலன்கள் - செப்டம்பர்-25-2024

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 09 ஆம் தேதி புதன்கிழமை 25.09.2024

 

சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.

 

இன்று மாலை 05.55 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று அதிகாலை 04.12 வரை மிருகசீரிடம்.

பின்னர் திருவாதிரை. விசாகம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

 

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

 

மேஷம்:
உத்தியோகம் பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள். பெண்களின் உதவியாளர் முக்கிய செயலை முடிப்பீர்கள். மூலதனத்துக்கு தேவையான பணம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். அலுவலகப் பணிகளின் அதிக சுமையால் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்வீர்கள்.

 

ரிஷபம்:
பழக்கத்தின் மூலமாக பணப் புழக்கத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் இன்பச் சுற்றுலா செல்வீர்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடித்து தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வீர்கள். காதலி கேட்ட துணிமணியை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.

 

மிதுனம்:
வண்டி வாகனங்கள் வேலை சமயத்தில் ரிப்பேர் ஆவதால் டென்ஷனாவீர்கள். சகோதர சகோதரிகளின் சண்டையால் மரியாதை இழப்பீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் பெற மாட்டீர்கள். பத்திரகாளியாக மாறும் மனைவியை மாற்ற முடியாமல் தடுமாறுவீர்கள். பணியின் காரணமாக மூச்சு திணறல் நோய்க்கு ஆளாவீர்கள். விபத்து ஏற்பட்டு சிறிய காயம் அடைவீர்கள்.

 

கடகம்:
வியாபாரப் போட்டியால் சின்ன நஷ்டம் அடைவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி முன்னேற்றம் ஏற்படாமல் சுணக்க நிலையை காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் வர தாமதமாவதால் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக கடன் வாங்குவீர்கள். வேலை இடத்தில் செய்யாத குற்றத்திற்காக குறை கூறப்படுவீர்கள். கைப் பொருள்களை பத்திரமாக வைத்திருக்க மறக்காதீர்கள்.

 

சிம்மம்:
நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வை அடைவீர்கள். இதுவரை தொந்தரவு கொடுத்து வந்த நோய் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களை உங்களுக்குச் சாதகமாக முடிக்க முயற்சி செய்வீர்கள். உபரி வருமானத்தில் பழைய பாக்கிகளை அடைப்பீர்கள். பிள்ளைகளின் கல்வித்திறனால் பெருமைப்படுவீர்கள்.

 

கன்னி:
பெரியவர்களின் ஆசியால் பல நல்ல காரியங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தின் மூலம் நல்ல காண்ட்ராக்ட்களை பெறுவீர்கள். உங்கள் நடத்தையால் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். பிள்ளைகள் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையிடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். தொழிலுக்கு இடையூறாக இருந்த முட்டுக்கட்டைகளை தவிடு பொடியாக்குவீர்கள்.

 

துலாம்:
உங்களை வீழ்த்த நினைத்த எதிரிகளின் எண்ணத்தை மன உறுதியால் வெற்றி பெறுவீர்கள். தொழிலுக்கு இருந்த போட்டிகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் அதிக வருமானம் பெற மாட்டீர்கள். பணவரவு செலவில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாற்றம் அடைவீர்கள்.

 

விருச்சிகம்:
மூளைக்குள் திட்டம் தீட்டி வேலைக்கு வடிவம் கொடுப்பீர்கள். வெளியூர்ப் பயணங்கள் அவ்வளவு சிறப்பாக அமையாததால் உடல் சோர்வு அடைவீர்கள். அரசு வேலைகளில் சங்கடங்களை எதிர்நோக்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் தொய்வான நிலையை காண்பீர்கள். எதிலும் அகலக்கால் வைக்காதீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.

 

தனுசு:
ஏட்டிக்குப் போட்டியாக பேசிய இல்லத்தரசியை இணக்கமாக கொண்டு வருவீர்கள். பந்தயங்களில் லாபத்தை பெறுவீர்கள். ரியல் எஸ்டேட்டை அமோகமாக நடத்துவீர்கள். பங்குப் பரிவர்த்தனைகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வீர்கள். வேலை இடத்தில் நல்ல மதிப்பு பெறுவீர்கள். உற்சாகமான பேச்சால் உறவுகளை மேம்படுத்தி அனைவரையும் ஒன்று சேர்ப்பீர்கள்.

 

மகரம்:
இரும்பாக இருக்கும் மனத்தை கரும்பாக மாற்றுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். இடையில் ஏற்படும் சின்னத் தொல்லைகளைக் கிள்ளி எறிவீர்கள். ஆடம்பரமான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வீர்கள். விருந்தினர்களுக்கு வீட்டில் சுவை மிகுந்த உணவு கொடுத்து அன்பை வெளிப்படுத்துவீர்கள்.

 

கும்பம்:
பணப்புழக்கம் இருந்தாலும் கை மீறி போகும் செலவால் கவலைப்படுவீர்கள். தேவையில்லாத சிந்தனையால் தூக்கம் கெடுவீர்கள். மனைவி மக்கள் உறுதுணையாக இருப்பதால் சற்று நிம்மதி அடைவீர்கள். நண்பர்களின் உதவியை தகுந்த நேரத்தில் பெறுவீர்கள். வியாபாரத்தை சரளமாக நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான லாபம் காண்பீர்கள்.

 

மீனம்:
வீடு வாங்கி பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். அரசுத் துறையில் அற்புதமாக வேலை செய்வீர்கள். தனியார் துறையில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். முன்னேற்றமான பலனும் அடைவீர்கள். திருமண முயற்சிகளை சாதகமாக முடிப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.

Tags:
#இன்றைய ராசி பலன்கள்  # today rasi palan  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos