தமிழ்நாடு முழுவதும் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது!
தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப்-2 தேர்வு தொடங்கியது.
துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர் உள்ளிட்ட பதவியிடங்கள் குரூப் 2 பிரிவில் வருகின்றன.
இதேபோன்று, உதவியாளர்கள் உள்பட அமைச்சுப் பணியில் காலியாக உள்ள இடங்கள் குரூப் 2ஏ பிரிவில் உள்ளன. 2 பிரிவுகளிலும் சேர்த்து மொத்தமாக 2,327 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இந்த பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் எழுதுகின்றனர்.
ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 2,763 தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.