முதல்வரின் ஆகச் சிறந்த தேர்வு திரு.முருகானந்தம் IAS...! பத்திரிகையாளர் திருஞானம் பாராட்டு
புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள திரு.முருகானந்தம் IAS அவர்களை வாழ்த்தி, மூத்த பத்திரிகையாளர் திருஞானம்
X தளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. அந்தப் பதிவு :
பல்வேறு லாபிகளை நிராகரித்து,
திரு.முருகானந்தம் IAS அவர்களை
புதிய தலைமைச் செயலராக
நியமித்திருப்பது என்பது
நம் முதல்வரின்
மாஸ்டர் ஸ்ட்ரோக்..!
சில அதிகாரிகள்
அறிவாளிகளாக இருப்பார்கள்
சமூக நீதி, சமத்துவ சிந்தனைகள் இருக்காது.
சிலர் IAS கொம்பு முளைத்தவர்களாக
தங்களை நினைத்துக்கொள்வார்கள்.
கற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்காது.
சிலர் தாங்களே எல்லாவற்றையும்
இழுத்துப்போட்டு செய்ய நினைப்பார்கள்.
தளபதிகளை நிர்வகிக்கத் தெரியாது.
சிலர் இடைவிடாத கூட்டம்போட்டே
நேரத்தை வீணடிப்பார்கள்.
செயல் திறன் இருக்காது.
சிலர் எல்லோருக்கும் நல்லவர்
என்ற பெயர் வாங்க நினைப்பார்கள்.
எதிரிகளின் காய் நகர்த்தல்கள் புரியாது.
இப்படிப்பட்ட பலவீனங்கள் இல்லாத,
சமூக அக்கறை மிக்க,
செயல்திறன்கள் மிக்க,
கற்றுக்கொள்ளும் பக்குவம் மிக்க,
மனித நேயம் மிக்க
ஒரு SUPER PERFORMER ஐ
புதிய தலைமைச் செயலராக
பணியேற்கச் செய்ததற்காக
நம் அன்பு முதல்வரை
எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம்
என்கிற
நம் முதல்வரின்
இமாலய இலக்கை நோக்கி
சாதனைகள் படைக்க
வாழ்த்துக்கள்
திரு.முருகானந்தம் சார்..!