வரலக்ஷ்மி விரதம் பெயர் வர காரணம்...

வரலக்ஷ்மி விரதம் பெயர் வர காரணம்...
By: No Source Posted On: August 16, 2024 View: 1156

வரலக்ஷ்மி விரதம் பெயர் வர காரணம்...

ஏன் இதை மஹாலக்ஷ்மி விரதம் என்று கூறுவதில்லை சௌபாக்கியலக்ஷ்மி விரதம் என்று கூறுவதில்லை தெரியுமா?

மஹாலக்ஷ்மியே விரதம் இருந்ததால் இதற்கு இந்த பெயர் வர காரணம் ஆயிற்று.

மஹாலக்ஷ்மி விரதம் உருவான கதை.

மூன்று அடி மண் கேட்டு வந்த வாமனனுக்கு தன்னுடைய தலையையே மூன்றாவது அடியாக தன் தலையை காண்பித்த மகாபலி சக்கரவர்த்திக்கு தன்னுடைய காலால் அழுத்த மகாபலி சக்கரவர்த்திக்கு கீழ் நோக்கி சென்று கொண்டு இருக்கும் போது இறைவனை பார்த்து ஐயனே நான் ஒரு சத்ரியன் எனக்கு தலை வலிக்காது ஆனால் நீங்களோ பிராமணன் உங்களுக்கு கால் வலிக்கும் என்று கூற அதற்கு மனம் மகிழ்ந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அதற்கு மகாபலி சக்கரவர்த்தியும் நீங்கள் என்னுடனே இருக்க வேண்டும் என்று கூறினார் அதனால் மகாவிஷ்ணு அங்கேயே தங்கி விட்டார். தன்னுடைய கணவர் காணாமல் போனதால் மகாலட்சுமி விரதம் இருந்து கடுமையான தவம் இருந்தாள்.அப்போது அங்கு வந்த நாரதர் நடந்த விஷயங்களை மகாலட்சுமிக்கு கூறினார் மகாலட்சுமி தான் உடனே பாதாள லோகம் சென்று மகாபலி சக்கரவர்த்தியிடம் தன்னை ஒரு சகோதரியாக தாங்கள் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி தன் புடவையின் ஒரு நூலை எடுத்து மகாபலி சக்கரவர்த்திக்கு கட்டி விட்டார் இதுவே ரக்ஷா பந்தன் என்று பிற்காலத்தில் தோன்றியது. பின்னர் மகாபலி சக்கரவர்த்தி ஸ்ரீமன் நாராயணனை மகாலட்சுமியுடன் அனுப்பி வைத்தார்.

ஒவ்வொரு பெண்களும் தங்கள் கணவன்மார்களுடன் இனிதாக வாழ தங்கள் சகோதரர்களுக்கு ரக்ஷா பந்தன் கட்டும் பழக்கம் இதில் இருந்து தோன்றியது.

இந்த பூஜையில் கண்டிப்பாக ஒரு சமித்துக் குச்சியாவது வைத்து வீட்டில் எரிக்க வேண்டும். இது மிகவும் நன்மைகள் தரும்.

நாம் அனைவரும் வரலக்ஷ்மி விரதம் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.அதாவது இந்த விரதம் மேற்கொள்வதால் மங்களவாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த வரலக்ஷ்மி விரதம் ஆனது ஆண்டுத்தோறும் ஆடி மாத வளர்பிறை வெள்ளியன்று (16/08/2024) கொண்டாடப்படுகிறது.

வரலக்ஷ்மி என்றாலே வரங்களை தருபவள் என்று பொருள்.பக்தர்கள் கேட்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, வரத்தை அருள்பவள் வரலக்ஷ்மி.

பாற்கடலில் உதிர்த்த நன்னாளை, வரலக்ஷ்மி விரத நாளாக அனுஷ்டிக்கிறோம். வரலட்சுமி விரதத்தின் மேன்மையை சொல்லும் புராணக் கதைகள் பார்வதியின் சாபத்திற்கு ஆளான சித்ரநேமி என்ற தேவதை வரலக்ஷ்மி விரதம் அனுஷ்ட்டித்து, சாப விமோசனம் பெற்றார் என்கிறது.

அதாவது சௌராஷ்ட்டிர நாட்டின் ராணியாக இருந்த கரசந்திரிகா செல்வ வளத்தின் ஆடம்பரத்தால் , ஒருமுறை மகாலட்சுமியை அவமதித்தாள்.

மங்காத செல்வம் கிடைக்க ஒரு முறை இவரை தரிசித்து வாருங்கள்
மங்காத செல்வம் கிடைக்க ஒரு முறை இவரை தரிசித்து வாருங்கள்

கர்வம் கொண்டு இலக்ஷ்மியை அவமதித்ததால், செல்வம் அனைத்தும் இழந்து வறுமையால் வாடினாள். ராணி கரசந்திராவின் மகள் சியாம பாலா , தெய்வாதீனமாக ஒருமுறை வரலட்சுமி விரதத்தைப் பற்றி அறிந்தார்.

அதுமுதல், அந்த விரதத்தை கடைபிடிக்கத் தொடங்கினாள். சியாம பாலாவின் விரதத்தால் மகிழ்ந்த அன்னை மகாலட்சுமி, அவளுக்கு நன்மைகள் அனைத்தும் அருளினாள் தன் மகளின்நிலையைப் பார்த்து, அவள் கடைபிடித்த வரலட்சுமி விரதத்தை தானும் கடைபிடித்தாள் .

இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றாள் கரசந்திரா. மேலும் ஒருவர் வரலக்ஷ்மி விரதம் மேற்கொள்வதால் நீண்ட ஆயுள்,அணைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு வரலக்ஷ்மி விரதம் இருப்பதால் விரைவில் திருமணம் நடக்கும்.

வரலக்ஷ்மி விரதத்தன்று, புண்ணிய நதியில் நீராடுவது ஒரு வருடம் தொடர்ந்து வரலக்ஷ்மி விரதம் இருப்பதற்கு பலனைத்தரும்.

வரலட்சுமி விரதம்

கேட்ட வரம் தரும் வரலட்சுமி விரதத்தின் புராண கதை - அரச பதவி கிடைக்க மகாலட்சுமியை வழிபடலாம்
தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. திருமணமான பெண்களும், கன்னிப்பெண்களும் இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். இந்த விரதம் யார் யார் இருந்து என்ன பலனை பெற்றார்கள் என்று புராண கதையே உள்ளது.
தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை ஆவணி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கேட்ட வரங்கள் மட்டுமல்ல கேட்காத வரங்களையும் கொடுப்பாள் அன்னை வரலட்சுமி. வரலட்சுமி விரதம் எப்படி தோன்றியது இந்த விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என புராண கதையே உள்ளது. வரலட்சுமி விரதம் பற்றிய புராண கதைகளையும் அந்த விரதம் அனுஷ்டிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.

மகத நாட்டில் குஞ்சினாபுரம் என்ற ஊரில் சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தார். திருமணமான அந்த பெண் தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல் இறைவனாகவே கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவளின் அன்பான மனதைக் கண்டு, மகாலட்சுமி தேவி மகிழ்ச்சியடைந்தாள்.
ஒரு நாள் சாருமதியின் கனவில் தோன்றிய லட்சுமிதேவி, என்னைத் துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன் என்று கூறியதுடன், அந்த விரதத்தை கடைப் பிடிக்கும் வழிமுறைகளையும் சாருமதிக்கு எடுத்துரைத்தார். அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் சிறப்பு மிகுந்த பணியையும் அவளிடம் லட்சுமிதேவி ஒப்படைத்தாள். சாருமதியும், தேவியின் எண்ணப்படியே அனைத்தையும் செய்து முடித்தாள். சாருமதி வரலட்சுமி விரதம் இருந்து பல நன்மைகளைப் பெற்றாள். அதைக் கண்ட மற்ற பெண்களும் அந்த விரதத்தை கடைப் பிடிக்கத் தொடங்கினர். இதன் காரணமாக வீடு மட்டுமல்ல நாடும் சுபிட்சம் அடைந்தது.

இழந்த செல்வம் செல்வாக்கு திரும்ப கொடுத்த விரதம்

முன்பு ஒரு காலத்தில் சவுராஷ்டிர தேசத்தில் பத்ரஷ்ரவா என்றொரு அரசன் இருந்தான். அவன் மிகவும் நல்ல முறையில் ஆட்சி நடத்தி வந்தான். அவனது மனைவி கசந்திரிகா அவளும் கணவனுக்கேற்ற மனைவியாக எல்லா வகையிலும் விளங்கினாள். எந்நேரமும் நல்ல சொற்களையே பேசி வேலைக்காரர்களை நல்ல முறையில் நடத்தி வந்தாள். அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு சியாமா என்று பெயரிட்டு அருமை பெருமையாக வளர்த்து வந்தார்கள். தினமும் லட்சுமி பூஜை செய்யாமல் கசந்திரிகா உணவருந்த மாட்டாள். கணவனுக்கு மிகவும் உதவியாகவும், வயதான மாமனார், மாமியாரை போற்றிப் பாதுகாப்பதில் மிகவும் அக்கறை உள்ளவளாகவும் இருந்தாள் அந்த மாதரசி. இதனால் மனம் மகிழ்ந்த லட்சுமிதேவி அவளுக்கு அருள் புரிய எண்ணினாள். ஓர் ஆடி வெள்ளிக்கிழமை நாளில் மிகவும் வயதான சுமங்கலி போல கசந்திரிகாவின் அரண்மனைக்கு வந்தாள்.
அப்போதுதான் பகல் உணவு உண்டு முடித்து தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தாள் கசந்திரிகா. அந்த சுமங்கலியை வரவேற்று உரிய முறையில் உபசரித்தாள். வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ்சள் முதலிய மங்கலப் பொருட்களைக் கொடுத்தாள். "தாயே, தாங்கள் யார்? என்னை நாடி வர என்ன காரணம்" என்று கேட்டாள் அதை அப்புறம் சொல்கிறேன் என் கேள்விக்கு நீ முதலில் பதில் சொல் நீ வணங்கும் லட்சுமி தேவியின் அவதார தினமான இன்று அதிதிக்கு உணவிடாமல் நீ இப்படி வயிறார சாப்பிட்டு தாம்பூலம் தரித்துக் கொண்டிருக்கிறாயே இது நியாயமா?" என்று கேட்டாள்.

ஒருபோதும் கோபமே வராத கசந்திரிகாவுக்கு அன்று மிகவும் ஆத்திரம் வந்து விட்டது. "நீ யாரோ ஒரு பிச்சைக்காரக் கிழவி, எனக்கு புத்தி சொல்வதா?" என்று கேட்டு அன்னையைக் கன்னத்தில் அடித்து விட்டாள். லட்சுமி தேவியும் ஒன்றும் சொல்லாமல் கண்கள் சிவக்க அந்த அரண்மனையை விட்டு வெளியேறத் தொடங்கினாள்.

அப்போது சியாமா அங்கு வந்து அந்த சுமங்கலியைப் பார்த்து, "தாங்கள் யாரம்மா? ஏன் கண்கள் சிவந்திருக்கின்றன? உங்களை யாராவது ஏதாவது சொன்னார்களா? என்று பரிவோடு வினவினாள். இதனால் உள்ளம் குளிர்ந்த திருமகள், "சியாமா, உன் அன்னைக்கு எப்படி லட்சுமிதேவியை முறைப்படி பூஜிப்பது என்பதை சொல்லிக் கொடுக்க வந்தேன். ஆனால் அவள் என் கன்னத்தில் அடித்து அவமானப்படுத்தி அனுப்பி விட்டாள்" என்றாள். உடனே "தாயே அந்தப் பூஜையை எனக்குக் கற்றுக் கொடுங்கள். நான் முறைப்படி செய்கிறேன்" என்று சியாமா கூற, அவ்வாறே அன்னையும் பூஜை முறைகளை அருளச் செய்தாள்.
அன்று முதல் சியாமா ஒவ்வொரு வருடமும் அந்த பூஜையை மிகச் சிறப்பாகச் செய்து வந்தாள். லட்சுமிதேவி அரண்மனையை விட்டு நீங்கியதால் பத்ரஷ்ரவா அரசனின் செல்வங்கள் குறைய ஆரம்பித்தன. அனைத்து செல்வங்களும் தன்னை விட்டுப் போகும்முன் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்றான். சியாமா வருடந்தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்த பலனால் அவளுக்கு அவளை போற்றிப் பாதுகாக்கும் கணவனாக மாலாதரன் என்ற மன்னன் வாய்த்தான். சியாமா கணவன் வீடு சென்றாள்.

பத்ரஷ்ரவாவின் எதிரிகள் அவனையும், அவனது மனைவியையும் நாட்டை விட்டுத் துரத்தி விட்டு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துக் கொண்டனர். நாட்டை விட்டு வெளியேறி காட்டில் அலைந்தனர் இருவரும். தன் பெற்றோரின் நிலை சியாமாவை மிகுந்த வருத்தத்துக்குள்ளாக்கியது. அவர்களை தன் நாட்டுக்கு அழைத்து உணவிட்டுக் காத்து வந்தாள். ஒரு முறை அவள் ஒரு குடம் நிறைய பொற்காசுகளைப் போட்டு தனது தாயிடம் கொடுத்து இதை வைத்துப் பிழைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினாள். கசந்திரிகா தொட்டதும் அந்தப் பானையில் இருந்த தங்கக் காசுகள் எல்லாம் கரிகளாக மாறிப்போனது.

இதைக் கண்ட சியாமாவுக்கு அப்போது தான் தன் தாய் அந்த சுமங்கலியை அவமானப்படுத்தி அனுப்பிய நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. வந்தது சாதாரண மானிடப் பெண்ணில்லை. அந்த மகாலட்சுமியே தான் என்று உணர்ந்து அதை தன் தாயிடம் கூறினாள். தன் தவறை உணர்ந்த கசந்திரிகாவும் வரலட்சுமி பூஜை முறையை தனக்குக் கற்பிக்குமாறு கேட்டுக் கொண்டாள். அன்றைய தினம் முதல் கசந்திரிகாவும் வரலட்சுமி பூஜையை முறைப்படி செய்து வந்தாள். அதன் பலனாக அவள் கணவன் தைரிய லட்சுமியின் அருள் பெற்று, வீரத்துடன் படை வீரர்களை சேர்த்துக் கொண்டு சென்று எதிரி மன்னனை வீழ்த்தி மீண்டும் முடி சூடினான். இழந்த செல்வங்கள் வைபவங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றாள் கசந்திரிகா மீண்டும் மகாராணியாக வாழ்ந்து வந்தாள்.

தேவ லோகத்தில் எழுந்த சந்தேகம்

சித்திரநேமி என்றொரு தேவகுலப் பெண் இருந்தாள். அவள் நடுநிலை தவறாதவள் என்று பெயரெடுத்தவள். அதனால் தேவர்களிடையே எழும் சில சச்சரவுகளுக்கு அவளே நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவாள். முன்னொரு காலத்தில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடும் பொழுது யார் ஜெயித்தார்கள் என்று சண்டை வந்தது. அப்போது அங்கிருந்த சித்திரநேமியிடம் நியாயம் கேட்டார்கள். அவளோ ஒரு தலைப் பட்சமாக சிவன் ஜெயித்ததாக கூறினான். பார்வதி கோபம் கொண்டு அவனை குஷ்ட ரோகியாக ஒளியிழந்து தவிப்பாயாக என்று சபித்து விட்டாள். பின்னர் சிவபெருமான் அவனுக்கு சாப விமோசனம் தருமாறு பார்வதியிடம் கேட்க பார்வதியும் எப்பொழுது அழகிய தடாக தீர்தத்தில் தேவகன்னிகைகள் புண்ணியமான விரதத்தை அனுஷ்டிப்பார்களோ அப்பொழுது உன் சாபம் நீங்கும் என்று கூறினாள்.

சாபம் பெற்ற சித்திர நேமி ஒரு தடாக கரையில் குஷ்ட ரோகியாக வசித்து வந்தான். பல காலத்திற்கு பிறகு அங்கு தேவ கன்னிகைகள் வந்து தேவி பூஜையில் ஈடுபடுவதைக் கண்டு தன்னைப்பற்றி கூறி தாங்கள் அனுஷ்டிக்கும் விரதம் பற்றி கூறுமாறு கேட்டான். அவன் மேல் பரிதாபம் கொண்ட கன்னிகைகள் தாங்கள் அனுஷ்டிப்பது வரலஷ்மி விரதம்.

சூரியன் சிம்மத்தில் இருக்கும் போது கங்கையும் யமுனையும் சேரும் காலத்தில் துங்கபத்திரா நதிக்கரையில் சிராவண மாதத்தில் சுக்லபக்ஷத்தில் வெள்ளிக்கிழமையில் முறைப்படி மஹாலஷ்மியை பற்றியதான இந்த விரதத்தை தொடங்க வேண்டும். என்று விரதம் பற்றி கூறினார்கள். அவர்கள் செய்த பூஜையை கண்ட சித்ரநேமிக்கு குஷ்டம் நீங்கி மீண்டும் கைலாயம் சென்றாள்.

பார்வதி தேவியும் இந்த விரதத்தை அனுஷ்டித்து சண்முகரை பெற்றாள். விக்ரமாதித்தன் இவ்விரதம் கடைபிடித்து நந்தனிடமிருந்து ராஜ்யம் பெற்றான். நந்தனின் மனைவி அனுஷ்டித்து பிள்ளைப்பேறு பெற்றாள். இந்தக் கதைகளை வரலட்சுமி விரதம் இருக்கும் நாளில் வயதான சுமங்கலி பெண்களின் வாயால் சொல்லக் கேட்பது குடும்பத்தில் சுபிட்சத்தை வரவழைக்கும். செல்வ வளம் பெருகும்.

Tags:
#வரலக்ஷ்மி விரதம்  # Lord Lakshmi 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos