ராசிபலன்கள், தமிழ் பஞ்சாங்கம் ஹோரை..
16-08-2024
தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, ஆடி 31
நாள் - கீழ் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை
திதி
சுக்ல பக்ஷ ஏகாதசி - Aug 15 10:27 AM – Aug 16 09:39 AM
சுக்ல பக்ஷ துவாதசி - Aug 16 09:39 AM – Aug 17 08:06 AM
நட்சத்திரம்
மூலம் - Aug 15 12:52 PM – Aug 16 12:43 PM
பூராடம் - Aug 16 12:43 PM – Aug 17 11:48 AM
கரணம்
பத்திரை - Aug 15 10:09 PM – Aug 16 09:40 AM
பவம் - Aug 16 09:40 AM – Aug 16 08:58 PM
பாலவம் - Aug 16 08:58 PM – Aug 17 08:06 AM
யோகம்
விஷ்கம்பம் - Aug 15 02:58 PM – Aug 16 01:11 PM
ப்ரீதி - Aug 16 01:11 PM – Aug 17 10:47 AM
வாரம்
வெள்ளிக்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் - 6:16 AM
சூரியஸ்தமம் - 6:31 PM
சந்திரௌதயம் - Aug 16 3:38 PM
சந்திராஸ்தமனம் - Aug 17 3:31 AM
அசுபமான காலம்
இராகு - 10:52 AM – 12:24 PM
எமகண்டம் - 3:27 PM – 4:59 PM
குளிகை - 7:48 AM – 9:20 AM
துரமுஹுர்த்தம் - 08:43 AM – 09:32 AM, 12:48 PM – 01:37 PM
தியாஜ்யம் - 11:07 AM – 12:42 PM, 09:57 PM – 11:29 PM
சுபமான காலம்
அபிஜித் காலம் - 11:59 AM – 12:48 PM
அமிர்த காலம் - 06:25 AM – 08:01 AM
பிரம்மா முகூர்த்தம் - 04:39 AM – 05:27 AM
ஆனந்ததி யோகம்
திரம் Upto - 12:43 PM
வர்தமானம்
வாரசூலை
சூலம் - West
பரிகாரம் - வெல்லம்
___________
வெள்ளி ஹோரை
காலை
06:00 - 07:00 - சுக் - சுபம்
07:00 - 08:00 - புத - சுபம்
08:00 - 09:00 - சந் - சுபம்
09:00 - 10:00 - சனி - அசுபம்
10:00 - 11:00 - குரு - சுபம்
11:00 - 12:00 - செவ் - அசுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சூரி - அசுபம்
01:00 - 02:00 - சுக் - சுபம்
02:00 - 03:00 - புத - சுபம்
மாலை
03:00 - 04:00 - சந் - சுபம்
04:00 - 05:00 - சனி - அசுபம்
05:00 - 06:00 - குரு - சுபம்
06:00 - 07:00 - செவ் - அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
___________
(16-08-2024) ராசி பலன்கள்
மேஷம்
ஆகஸ்ட் 16, 2024
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணைவரிடம் அனுசரித்துச் செல்லவும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். பூர்வீகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : உபாதைகள் ஏற்படலாம்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : ஒத்துழைப்பான நாள்.
---------------------------------------
ரிஷபம்
ஆகஸ்ட் 16, 2024
சோம்பேறித் தனத்தின் மூலம் செயல்பாடுகளில் கால தாமதங்கள் உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். பயணத்தால் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கும். உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : தாமதமான நாள்.
ரோகிணி : மாற்றங்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஆகஸ்ட் 16, 2024
உடன்பிறந்தவர்கள் மூலம் ஒத்துழைப்பான சூழல் அமையும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பிரபலமானவர்களின் சந்திப்புகளால் மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பும், மதிப்பும் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பான நாள்.
திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும்.
புனர்பூசம் : தீர்வுகள் கிடைக்கும்.
---------------------------------------
கடகம்
ஆகஸ்ட் 16, 2024
சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகப் பணிகளில் பொறுமை வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூசம் : பேச்சுவார்த்தைகள் கைகூடும்.
ஆயில்யம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
சிம்மம்
ஆகஸ்ட் 16, 2024
முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றமான தருணங்கள் அமையும். கலைத்துறையில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
மகம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
பூரம் : மாற்றமான நாள்.
உத்திரம் : சேமிப்புகள் மேம்படும்.
---------------------------------------
கன்னி
ஆகஸ்ட் 16, 2024
இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். நிர்வாகத்தில் தனித்திறமை புலப்படும். மருத்துவம் தொடர்பான துறைகளில் ஆர்வம் ஏற்படும். அசதி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.
சித்திரை : ஆர்வம் பிறக்கும்.
---------------------------------------
துலாம்
ஆகஸ்ட் 16, 2024
வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கால்நடை மூலம் ஆதாயம் உண்டாகும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : ஆர்வம் ஏற்படும்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : புரிதல்கள் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
ஆகஸ்ட் 16, 2024
தனவரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்கு சாதுரியம் மூலம் ஆதாயமடைவீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
விசாகம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : ஆதரவுகள் கிடைக்கும்.
கேட்டை : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------
தனுசு
ஆகஸ்ட் 16, 2024
புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். முன்கோபத்தால் சில மனக்கசப்புகள் ஏற்படும். தாய்மாமன் வகையில் ஆதரவான சூழல் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளி வட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : தேடல்கள் அதிகரிக்கும்.
பூராடம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.
---------------------------------------
மகரம்
ஆகஸ்ட் 16, 2024
இனம்புரியாத சிந்தனைகள் மற்றும் செயல்களில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழல் அமையும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
உத்திராடம் : சோர்வான நாள்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
ஆகஸ்ட் 16, 2024
பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்விப் பணிகளில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பரிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
அவிட்டம் : அனுகூலம் ஏற்படும்.
சதயம் : மாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.
---------------------------------------
மீனம்
ஆகஸ்ட் 16, 2024
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாக நிறைவேறும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். கெளரவ பொறுப்புகள் மூலம் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்
பூரட்டாதி : லாபங்கள் மேம்படும்.
உத்திரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும்.
ரேவதி : மாற்றமான நாள்.
Tags:
#ராசிபலன்கள்
# தமிழ் பஞ்சாங்கம் ஹோரை..