நாக சைதன்யா-சோபிதா திருமண நிச்சயதார்த்தம்!

நாக சைதன்யா-சோபிதா திருமண நிச்சயதார்த்தம்!
By: No Source Posted On: August 08, 2024 View: 57

நாக சைதன்யா-சோபிதா திருமண நிச்சயதார்த்தம்!

 

தமிழில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

 

'மங்கி மேன்' என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார்.

 

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் நாகார்ஜுனா புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

 

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை 9.42 மணிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

 

சோபிதா துலிபாலாவை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன்.

 

மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துகள்!" என்று நாக சைதன்யா- சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

Tags:
#Naga Chaitanya  # Sobhita Dhulipala  # Engagement  # Nagarjuna  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos