சற்று உயர்ந்தது தங்கம் விலை!

சற்று உயர்ந்தது தங்கம் விலை!
By: No Source Posted On: August 08, 2024 View: 3934

சற்று உயர்ந்தது தங்கம் விலை!

 

பட்ஜெட் எதிரொலியாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

இதையடுத்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கு விற்று வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.

 


அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.50,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1,120 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:
#Chennai  # Gold Rate  # Silver Rate  # சென்னை  # தங்கம் விலை  # வெள்ளி விலை 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos