மேட்டுப்பாளையம் – உதகை : மேலும் சில நாட்கள் மலை ரெயில் சேவை ரத்து!

மேட்டுப்பாளையம் – உதகை : மேலும் சில நாட்கள் மலை ரெயில் சேவை ரத்து!
By: No Source Posted On: August 06, 2024 View: 4434

மேட்டுப்பாளையம் – உதகை : மேலும் சில நாட்கள் மலை ரெயில் சேவை ரத்து!

 

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

கல்லார் – ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்தது.

 

மண்சரிவு அகற்ற காலதாமதம் ஏற்பட்டதால் மலை ரெயில் சேவை வரும் 6ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது.

 

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் – உதகை மலை ரெயில் சேவை மேலும் சில தினங்களுக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளது.

 

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நடைபெற்றுவரும் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முடியாததால் வருகிற 15-ந்தேதி வரை ரெயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
#Nilgiri  # Mountain Train  # மலை ரெயில்  # ரெயில் சேவை ரத்து 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos