
தஞ்சாவூர் பாதாள சாக்கடை கட்டமைப்பு பணியின் போது ஏற்பட்ட திடீர் விபத்தில் மண்ணில் புதைந்த இரண்டு தொழிலாளர்கள்
தஞ்சாவூரில் பாதாள சாக்கடை சரிசெய்யும் பணியின் போது மண்ணில் புதைந்த தொழிலாளர்களில் ஒருவர் உயிர் தப்பிய நிலையில், மற்றொருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
விளார் சாலையில் ஜெகநாதன் தெருவில் உள்ள பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணியில் நாராயணமூர்த்தி, தேவேந்திரன் ஆகிய தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
20 அடி பள்ளம் தோண்டி அதனை சரிசெய்து முடித்தபோது எதிர்பாராத விதமாக மண் சரிந்து அவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தேவேந்திரனை மீட்டனர்.
ஆனால் 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு நாராயணமூர்த்தி என்ற மற்றொரு தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார்.
தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர் தேவேந்திரன் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உயிரிழந்த தொழிலாளியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
Tags:
#Thanjavur
# Landslide
# Death
# Sewer Workers