
எளிதில் உடல் எடையை குறைக்க இத சாப்பிடுங்க போதும்
உடல் எடையை உடனடியாக குறைக்க திட்டமிடும் பலரும், பச்சையாக காய்கறிகளையும், தண்ணீரையும் மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர்.
இவை மட்டுமின்றி வேறு சில அற்புதமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் எடையை எளிதாகக் குறைக்க முடியும்
கொய்யா
அனைத்து சீசன்களிலும், அனைத்து தரப்பு மக்களாலும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியது.
இதில் ஆரஞ்சு பழங்களை விட கொய்யாவில் அதிக வைட்டமின் சி காணப்படுகிறது.
கொழுப்பை எரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கொய்யா சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும்.
இதன் காரணமாக, குறைந்த அளவு உணவு உட்கொள்ளப்படுகிறது.
அதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் கொய்யா இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
இது நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது.
இது கிளைசெமிக் குறியீட்டில் (ஜிஐ) குறைந்த தரவரிசையில் உள்ளது.
இது வேகமாக ஜீரணமாகும் உணவு. குறைந்த கலோரி உணவு.
மஞ்சள்
அழகையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பதில் மஞ்சளுக்கு பெரும் பங்குண்டு.
மஞ்சள் கலந்த தேநீரை தினமும் உட்கொள்வது வயிற்றில் பித்த உற்பத்தியைக் குறைக்கிறது.
கொழுப்பை எரிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
மஞ்சளை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
வால் நட்ஸ்
வால்நட்ஸ் உடல் எடையை குறைக்கும் சூப்பர் உணவுகளில் ஒன்றாகும்.
அவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
இது பசியைக் கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது.
இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டு வந்தால், பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
வால் நட்ஸ் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.
கொழுப்பை எரிக்கவும், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கவும் உதவுகிறது.
மக்கானா
தாமரை விதை என்பதை விட, மக்கானா என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு அறிவார்கள்.
ஏனெனில் பெரும்பாலான வீடுகளில் பாப் கார்னுக்கு பதிலாக தாமரை விதையில் இருந்து பாப் செய்யப்படும் இந்த மக்கானா சிறந்த நொறுக்குத்தீனியாக பயன்படுத்தப்படுகிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சூப்பர் உணவு என்றே கூறலாம்.
இதில் கலோரிகள் குறைவு.
இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை எரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் ஆரோக்கியம் மட்டுமின்றி உங்கள் அழகும் மேம்படும்.
இதில் கால்சியம் சத்து நிறைந்து எலும்புகளை வலுவாக்கும். புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம்.
சர்க்கரை வள்ளி கிழங்கு
வைட்டமின் ஏ, சி, பி, மாங்கனீஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஸ்வீட் பொட்டெட்டோவில் ஏராளமாக உள்ளன.
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் பசியின்மை குறைகிறது.
இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைவது மட்டுமின்றி கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.
இதை உணவில் சைட் டிஷ் அல்லது ஸ்நாக்ஸாகவும் எடுத்துக் கொள்ளலாம். இது மிகவும் சுவையானது.
Tags:
#Weight Loss
# Body Fat
# Health Tips