வெளிநாடு செல்லும் மாணவர்களின் பயண செலவை தமிழக அரசு ஏற்கும்!
படிக்க முதல்முறையாக வெளிநாட்டுக்கு செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது,
நடப்பாண்டு 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்கு செல்கின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது.
ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் சாரை சாரையாக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிக்கச் செல்கின்றனர்.
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 17 சதவீதம் அதிகரித்து உள்ளது.
வெளிநாடுகளுக்கு முதல்முறையாக படிக்கச் செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
Tags:
#TNGOVT
# Education
# MK Stalin