தரையில் அமர்ந்து, குழந்தைகளுடன் காலை உணவு..! உத்வேகம் தரும் உதயநிதி

தரையில் அமர்ந்து, குழந்தைகளுடன் காலை உணவு..! உத்வேகம் தரும் உதயநிதி
By: No Source Posted On: August 01, 2024 View: 989

தரையில் அமர்ந்து, குழந்தைகளுடன் காலை உணவு..! உத்வேகம் தரும் உதயநிதி

 

திருச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டம் ஆய்வு செய்து மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தினார்.

 

திருச்சி மாவட்டத்தில் 2 நாள் பயணமாக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

 

இதன் 2ம் நாளாக இன்று காலை திருச்சி கம்பரசம்பேட்டையில் நடைபெற்று வரும் பறவை பூங்கா பணிகள் பார்வையிட்டார்.

 

தொடர்ந்து திருச்சி மாவட்டம், அல்லூரில் உள்ள பாரதி தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து

 

ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவியர்கள் அமர்ந்து கண்ணில் வைக்கப்பட்டிருந்த வெண்பொங்கல், சர்க்கரை பொங்களை அருந்தினார்.

 

 

இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, இனிக்கோ இருதயராஜ்,

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் விஜேந்திரன், மாவட்ட திமுக துணை தலைவர் கருணாநிதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:
#Trichy  # Udhayanidhi Stalin  # காலை உணவு திட்டம் 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos