வயிற்றுப் புண்களை விரைவில் ஆற்றும் ஆயுர்வேத வீட்டு வைத்தியம்

வயிற்றுப் புண்களை விரைவில் ஆற்றும் ஆயுர்வேத வீட்டு வைத்தியம்
By: No Source Posted On: July 29, 2024 View: 210

வயிற்றுப் புண்களை விரைவில் ஆற்றும் ஆயுர்வேத வீட்டு வைத்தியம்

 

வயிற்றில் ஏற்படும் காயங்கள் அல்லது புண்கள் மருத்துவ மொழியில் பெப்டிக் அல்சர் எனப்படும்.

 

வயிற்றில் மியூகஸ் இன் மென்மையான ஒரு அடுக்கு உள்ளது, இது பெப்சின் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலிருந்து வயிற்றின் உள் புறணியைப் பாதுகாக்கிறது.

 

பொதுவாக உணவுக்குழாய், வயிறு மற்றும் சிறுகுடலின் மேல் பகுதியில் ஏற்படும்.

 

ஹெலிகோபாக்டர் பைலோரி அல்லது எச்.பைலோரி போன்ற பாக்டீரியாக்களால் பெரும்பாலான புண்கள் ஏற்படுகின்றன என்று புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

 

இது போன்ற புண்கள் ஏற்படும் பிரச்சனைக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது ஒரு அபாயகரமான பிரச்சனையாக மாறி விடும். இந்த பாக்டீரியாவைத் தவிர,

 

உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையும் ஓரளவு அல்சருக்குக் காரணமாகும்.

 

இந்த நோயைத் தவிர்க்க சில வீட்டு வைத்தியங்கள்.

 

வயிற்றுப் புண் அறிகுறிகள்

 

 

வயிற்றில் கடுமையான வலி ஏற்படுவது ஒரு பொதுவான அறிகுறியாகும், இது தவிர, இரவில் வயிற்றில் எரிச்சல் உணர்வு, இரத்த வாந்தி, மலத்தின் நிறம் கருமையாதல், குமட்டல், திடீரென எடை குறைவது அல்லது பசியின்மை ஆகியவை காணப்படுகின்றன.

 


குளிர்ந்த பாலின் அதிசயம்

 

 

பால் குடிப்பதால் இரைப்பையில் அமிலம் உண்டாகிறது என்றாலும், அரை கப் குளிர்ந்த பாலில் அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து குடித்தால் வயிற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்.

 

அல்லது அல்சர் வந்தால், சிறிது குளிர்ந்த பாலில் சம அளவு தண்ணீர் கலந்து கொடுத்தால், சில நாட்களில் நிவாரணம் கிடைக்கும்.

 


பேரிக்காய்

 

 

பேரிக்காயில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன, இது வயிற்று புண்ணின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

 

இது ஹெச்.பைலோரி நோய்த்தொற்றையும் தடுக்கிறது.

 

இதில் நார்ச்சத்து உள்ளது, இதன் மூலம் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது.

 

பேரிக்காய்களை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு சிறுகுடல் புண் ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறைகிறது.

 

பாதாம் பருப்பு

 


வயிற்றுப் புண் உள்ளவர்கள் பாதாம் பருப்பை உட்கொள்ள வேண்டும். இது தவிர பாதாமை அரைத்து பாலில் சேர்த்து காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும்.

 

பச்சை மற்றும் பழுத்த வாழைப்பழங்கள்

 

 

வாழைப்பழம் வயிற்றுப்புண் வராமல் தடுக்கிறது.

 

வாழைப்பழம் வயிற்று அமிலத்தை குணப்படுத்தும் ஆன்டி பாக்டீரியா பண்புகளைக் கொண்டுள்ளது.

 

வயிற்று புண் நோயாளிகள், பழுத்த மற்றும் பழுக்காத வாழைப்பழங்களை சாப்பிடுவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

 

பசு நெய்