செல்வம் குறைகிறதா எதனால் என்று புரியவில்லையா அப்படினா இந்த பதிவினை அவசியம் படிக்கவும்

செல்வம் குறைகிறதா எதனால் என்று புரியவில்லையா அப்படினா இந்த பதிவினை அவசியம் படிக்கவும்
By: No Source Posted On: July 29, 2024 View: 1530

செல்வம் குறைகிறதா எதனால் என்று புரியவில்லையா அப்படினா இந்த பதிவினை அவசியம் படிக்கவும்

 

1. கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.

 

2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.

 

3. தலைமுடி தரையில் உலாவருவது.

 

4. ஒட்டடைகள் சேருவது.

 

5. சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது தூங்குவது.

 

6. எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.

 

7. பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.

 

8. ஆண்கள் புதன் சனி தவிர மற்ற நாளில் தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பது.

 

9. குழாய்களில் தண்ணிர் சொட்டுவது.சுவற்றில் ஈரம் தங்குவது.

 

10. செல் (கரையான்) சேருவது.

 

11. பூரான் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.

 

12. அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது.

 

13. உணவு பொருள்கள் வீண்ணடிப்பது.

 

14. உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.

 

15. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.

 

16. மெல்லிசை கேட்காமல் சதா காலம் ராட்சச இசையை, அபஸ்வர இசைகளை கேட்பது.

 

17. இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.

 

18. படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.

 

19. வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.

 

20.வீட்டீல் எந்த நேரமும் சீரியல் பார்த்து கொண்டு வீண்கண்ணீர் வடிப்பது.

 

21.நான் தான் இந்த குடும்பத்தை பார்த்து கொள்கிறேன் என்று வீராப்பும் , திமிரோடும் சொல்லும் ஆண் பெண்களாலும்.

 

22.எனக்கு மட்டும் ஏன் இந்த நிலமை என்று சதா காலாமும் புலம்பி கொண்டே இருப்பது.

 

23.எனக்கு மட்டும் எப்ப பார்த்தாலும் நேரமே சரி இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தால் அதுவாகவே சரியில்லாமல் போய்விடும்.

 

24.பணத்தினை செலவு செய்யும் போது மனதில் விரக்த்தியுடன் செலவு செய்வது.

 

25.நல்ல நாட்கள் , நேரம் காலம் தெரியாமல் அசைவம் சாப்பிடுவது.

 

26.யாரை பார்த்தாலும் பொறாமைபடுவது.

 

27.நல்லதை யார் செய்தாலும் மனதார பாராட்டாமல் இருப்பதும்.

 

28.உதவி செய்தோருக்கு நன்றிகள் இல்லாமல் அவர்களுக்கே எதிரியாக செயல்படுவதும்.

 

29.உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் வாரம் ஒரு நாட்களாவது அல்லது தினமும் ஒரு மணி நேரமாவது குடும்ப்பாத்தாருடன்நேரத்தை செலவு செய்து ஆனந்ததை பெறுங்கள் இல்லை என்றால் அகிலத்தையும் வென்றாலும் அவர்கள் வாழ்க்கை ஒரு பூஜ்யம் தான்.

 

எப்போதும் நல்ல எண்ணங்களையே எண்ணுங்கள். நல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை.

 

அவை உங்களுக்கு நல்லதையே கொண்டு வந்து சேர்க்கும், நீங்கள் உங்களை வலிமையானவராக நினைத்தால் வலிமையானவர்களாக மாறுவீர்கள்.

 

பலவீனராக நினைத்தால் பலவீனராகி விடுவீர்கள்.

 

உங்கள் எண்ணங்களுக்கு அவ்வளவு வலிமை உண்டு.

 

எனவே எப்பொழுதும் எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து ஆரோக்கியமான நல்ல எண்ணங்களுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுங்கள்.

 

எனவே உங்கள் எண்ணம் உயர்ந்ததாக இருக்கட்டும்.

 

இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களை உயர்த்தும்.!

Tags:
#ஆன்மிகம்  # செல்வம்  # Money  # Culture  # Traditional 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos