மொச்சைக் கொட்டை பயன்கள்

மொச்சைக் கொட்டை பயன்கள்
By: No Source Posted On: July 27, 2024 View: 228

மொச்சைக் கொட்டை பயன்கள்

 

மொச்சைக் கொட்டையானது புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

 

மேலும் இதில் குறைந்த சர்க்கரை மற்றும் குறைந்தளவிலான கலோரிகள் உள்ளது.

 

இது தவிர, மொச்சைக் கொட்டையில் கொலஸ்ட்ரால் இல்லை.

 

இது போல பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை மொச்சைக் கொட்டை வழங்குகிறது.

 

இதில் மொச்சைக் கொட்டை தரும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

 

இரத்த அழுத்தத்தைக் குறைக்க

 

 

உடலில் சமநிலையை நிர்வகிப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் சோடியம் ஒரு முக்கிய ஊட்டச்சத்தாகக் கருதப்படுகிறது.

 

அதன் படி ஒரு கப் அளவிலான மொச்சையில் 38 மி.கி அளவு சோடியம் உள்ளது.

 

இது உயர் இரத்த அழுத்தத்தைத் தவிர்க்க உதவுகிறது.

 

மொச்சைக் கொட்டையானது தாவர அடிப்படையிலான பொருள் ஆகும்.

 

இதில் பொதுவாக குறைந்த சோடியம் அளவையும், பொட்டாசியம் அதிகளவிலும் காணப்படும்.

 

இவை உயர் இரத்த அழுத்தத்திற்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

 

இதய ஆரோக்கியத்திற்கு

 

 

உயர் இரத்த அழுத்தத்தைக் கையாள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

 

இது தவிர மொச்சையில் ஐசோபிளேவோன்கள் நிறைந்துள்ளது.

 

இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து, இதய நோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

 

மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வைட்டமின் கே ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஃபோலியேட் போன்றவை அதிகம் உள்ளது.

 

இரத்த சோகையைத் தடுக்க

 

 

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்தசோகை ஏற்படலாம்.

 

மேலும் தசை பலவீனம், சோர்வு மற்றும் பாக்டீரியா போன்ற நோய்த்தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

மேலும் மொச்சையில் உள்ள அதிகளவிலான ஊட்டச்சத்துக்கள் இரும்புச்சத்துக் குறைபாட்டை நீக்கி இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.

 

எலும்பு ஆரோக்கியத்திற்கு

 

 

மொச்சையில் ஐசோபிளேவோன்கள் நிறைந்து காணப்படுகிறது.

 

இது எலும்புகளை மிகவும் சக்தி வாய்ந்ததாக மாற்ற உதவுகிறது.

 

இதன் மூலம் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

 

அதிலும் குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து விடுபட மொச்சைக் கொட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவுகிறது.

 

ஒவ்வாமை எதிர்ப்புப் பண்புகள்

 

 

மொச்சையானது அதிகளவிலான ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

 

இதன் மூலம் கீல்வாதம், முடக்கு வாதம் போன்ற வீக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது.

 

இது தவிர, மூச்சுத்திணறல் மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் மொச்சைக் கொட்டை ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.

 

மேலும் சுவாசப் பாதையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க இது பெரிதும் உதவுகிறது.

 

உடல் எடை இழப்புக்கு

 

 

மொச்சைக் கொட்டை குறைந்த அளவிலான கலோரிகளையும், அதிகளவிலான புரதத்தையும் கொண்டுள்ளதால் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

மேலும் மொச்சைக் கொட்டையில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை உடலில் சேரும் கொழுப்பைக் குறைப்பதுடன், அதிக கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது.

 

செரிமான ஆரோக்கியத்திற்கு

 

 

மொச்சையில் உள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் குடல் பிரச்சனைகள் மற்றும் வீக்கம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.

 

மேலும் இதன் நார்ச்சத்துக்கள் ஆரோக்கியமான செரிமான பாதைக்கு வழிவகுக்கிறது.

 

இவ்வாறு செரிமான செயல்முறையை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

 

நீரிழிவு நோயைக் குறைக்க

 

 

மொச்சையில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் இரத்த குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

 

மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் புரதமும் இதில் நிறைந்து காணப்படுகிறது.

 

குறிப்பாக டைப்-2 நீரிழிவு நோய்க்கு மொச்சை மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

 

இது வளர்ச்சிதை மாற்ற செயல்முறைகளை மேம்படுத்தி, உடல் குளுக்கோஸைக் கட்டுப்படுத்த இன்சுலின் நன்றாக வேலை செய்கிறது.

 

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

 

 

உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக உடலைப் பாதுகாப்பதற்கு நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவது அவசியமாகிறது.

 

உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மொச்சைக் கொட்டையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் காரணமாகும்.

 

புற்றுநோயைத் தவிர்க்க

 

 

மொச்சையில் உள்ள ஆரோக்கியமிக்க பண்புகள் புற்றுநோயைத் தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

இது பெண்களில் மார்பக புற்றுநோய் மற்றும் ஆண்களில் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது.

 

எனவே இது போன்ற ஏராளமான நன்மைகளைப் பெற விரும்புபவர்கள் மொச்சைக் கொட்டையை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Tags:
#மொச்சைக் கொட்டை  # Peanut  # Health Tips 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos