அம்மனின் அருளைத் தரும் கிழமைகளுக்கான விரதங்கள்

அம்மனின் அருளைத் தரும் கிழமைகளுக்கான விரதங்கள்
By: No Source Posted On: July 27, 2024 View: 1335

அம்மனின் அருளைத் தரும் கிழமைகளுக்கான விரதங்கள்

 

விரதங்களில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுவது அம்மனுக்கான விரதங்கள் ஆகும்.

 

ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம்.

 

அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

 

கிழமைகளும் பலன்களும் :

 

ஞாயிற்றுக்கிழமை :

 


மாங்காட்டு அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து வழிபட்டு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம்.

 

 

மனதில் உள்ள பயம் நீங்கி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். பெயர் புகழுடன் வாழ்வர்.

 

திங்கட்கிழமை :

 

திங்கட்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தால் வாழ்வில் உள்ள இடையூறுகள் நீங்கி நன்மை பெறுவர்.

 

இந்த கிழமையில் அம்மனை வழிபட்டு வந்தால் உடல்நல குறைவிலிருந்து தப்பி நீண்ட ஆயுள் கிடைக்கும்.

 

செவ்வாய்க்கிழமை :

 

செவ்வாய்க்கிழமைகளில் காஞ்சி காமாட்சியை வழிபட்டு விரதமிருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி மங்கலம் உண்டாகும்.

 

 

நீண்ட காலமாக திருமணத்தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும்.

 

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமையில் அம்மனுக்கு விரதமிருந்து வந்தால் திருமணத்தடை நீங்கும்.

 

பில்லி, சூனிய பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் இந்நாளில் விரதமிருந்து பலன் அடையலாம்.

 

புதன்கிழமை :

 

புதன்கிழமைகளில் அம்மனை விரதமிருந்து தரிசித்து வந்தால் அறிவுக்கூர்மை பெருகும். கல்வியில் அதிக நாட்டம் உண்டாகும்.

 

கவிஞர்கள், வணிகர்கள், ஜோதிடர்கள், கலைத்துறையில் உள்ளவர்கள் இந்த கிழமையில் பராசக்தி அம்மனை மனமுருகி வழிபட்டு வந்தால் மேன்மை அடையலாம்.

 

வியாழக்கிழமை :

 

வாழ்வில் உள்ள எதிரிகளின் தொல்லைகள் நீங்கவும், உறவினர்கள் தொல்லைகள் நீங்கவும் வியாழக்கிழமைகளில் அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டு வர அனைத்து தொல்லைகளும் நீங்கி சுகம் பெறுவர்.

 

பொன் பொருள் சேர்க்கை உண்டாக அம்மனுக்கு இந்நாளில் விரதமிருப்பது சிறப்பு.

 

வெள்ளிக்கிழமை :

 

திருமணம் கைகூடவும், தம்பதி ஒற்றுமை பெருகவும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விரதமிருந்து வழிபடலாம்.

 

 

புத்திர பாக்கியம் கிடைக்கவும் இந்த நாளில் விரதமிருக்கலாம். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும்.

 

இந்த நாளில் அம்மனை தரிசித்தால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.

 

சனிக்கிழமை :

 

வழக்குகளில் வெற்றி பெற, விரோதிகளின் தொந்தரவு நீங்கவும் அம்மனுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடலாம்.

 

இந்த கிழமையில் அம்மனை வழிபட நீண்ட ஆயுள் பெறலாம்.

Tags:
#விரதங்கள்  # அம்மன்  # ஆன்மிகம்  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos