அரசாணிக்காய் பயன்கள்
வைட்டமின் B1, B2, B6, D, C, பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிம சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர், ஜிங்க் இப்படி பல சத்துக்கள் அரசாணிக்காயில் உள்ளன.
விதைகள்
அரசாணிக்காய் விதைகளிலும் நிறைய நார்ச்சத்து உள்ளன.
இந்த நார்ச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
அரசாணிக்காயின் இலைகளிலும் நிறைய சத்து இருப்பதால், இதை சமையலுக்கு பயன்படுத்துவார்கள்.
இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
ஆனாலும், உடலில் கெட்ட ரத்தத்தை தோற்றுவிக்கும் குணம் அரசாணிக்காய்களுக்கு உண்டு, வாதகுணமும் இருக்கிறது.
உடலில் பலமில்லாதவர்கள் இதை சாப்பிட்டால், உடல் மேலும் இளைத்துவிடுமாம்.
இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் இந்த காயை தவிர்க்கலாம்.
அருமருந்து
மற்றபடி, உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு அருமருந்துதான் இந்த அரசாணிக்காய். அரசாணிக்காயில் வைட்டமின் A இருப்பதுதான் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாகும்.
இதை சாப்பிடுபவர்களுக்கு கண்கள் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நெருங்குவதில்லையாம்.
நீர்க்காய் என்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதற்கு முக்கியத்துவம் தந்து டயட்டில் சேர்த்து கொள்வார்கள்.
100 கிராம் அரசாணிக்காயில் 26 கலோரிகள் நிறைந்திருக்கிறது.
ஆனால், கொழுப்பு இதில் கிடையாது. மேலும், அதிக நார்ச்சத்தும், குறைவான கலோரியும் உள்ளதால், டயட் இருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாகும்.
இந்த காயில், பெக்ட்டின் என்ற வேதிப்பொருள் உள்ளதால், கொழுப்பு சத்தை வெகுவாக குறைக்கிறது.
அரசாணிக்காய்
வெறும் 100 கிராம் அரசாணிக்காயை சுத்தமாக கழுவி, தோலுடன் சேர்த்து ஜூஸ் போட்டு, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டுமாம்.
இதனால், உடலில் உள்ள கழிவுகள், நச்சுக்கள் வெளியேறும்.
இருமல் இருப்பவர்கள் இந்த அரசாணிக்காயை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.
தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், ஒரு டம்ளர் அரசாணிக்காயில் ஜூஸ் தயாரித்து, அத்துடன் தேன் கலந்து குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும்.
பித்தத்தை போக்கும் குணம் இந்த அரசாணிக்காய்க்கு உண்டு.
சிறுநீரக கற்கள்
சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் 3 வேளை என 10 நாளைக்கு அரசாணிக்காயில் ஜூஸ் தயாரித்து, அரை டம்ளர் குடித்தால் சிறுநீரக கோளாறுகள் நீங்கிவிடும்.
சிறுநீர் பெருகும், ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பும் நீங்கும்.
இதனால், மாரடைப்பு வருவது தடுக்கப்படுகிறது.
இந்த காயை அடிக்கடி சமையலில் சேர்த்து வந்தால், உடலிலுள்ள பித்தம் போக்கும், பசியை தூண்டும், மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்று பொருமல் இப்படி பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
குளிர்ச்சி
வைட்டமின்கள் B, C உள்ளதால், உடம்பிலுள்ள உஷ்ணத்தை குறைக்கக்கூடிய சக்தி இந்த அரசாணிக்காய்களுக்கு உண்டு.
உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும் தன்மை கொண்டது இந்த அரசாணிக்காய்.
தீப்புண்களையும், கொப்புளங்களையும் குணப்படுத்தும் தன்மை இந்த காய்க்கு நிறையவே உண்டு.
குளிர்ச்சி நிறைந்த காய் என்பதால், இதை அரைத்து, தலைக்கு தடவி குளித்தால் உஷ்ணத்தால் தலைமுடி உதிர்வது நிற்கும்.
Tags:
#அரசாணிக்காய்
# Pumpkin
# Pumpkin Seeds
# Health Tips