டெங்குவால் இதுவரை மூவர் உயிரிழப்பு - அமைச்சர் மா சுப்பிரமணியன்

டெங்குவால் இதுவரை மூவர் உயிரிழப்பு - அமைச்சர் மா சுப்பிரமணியன்
By: No Source Posted On: July 26, 2024 View: 1810

டெங்குவால் இதுவரை மூவர் உயிரிழப்பு - அமைச்சர் மா சுப்பிரமணியன்

 

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை, டெங்குவால் இதுவரை மூவர் உயிரிழப்பு - அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

 

 

சென்னை சிஐடி நகர் பகுதியில் மழைக்கால நோய்கள் முன்னெச்சரிக்கை சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

 

சிஐடி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா சுப்பிரமணியன்

 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பருவமழைக்கும் முன்னதாக பருவ மழை காரணங்களால் ஏற்படுகிற நோய் பாதிப்புகள் கண்டறிந்து அவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது வடகிழக்கு பருவமழை,

 

தென்மேற்கு பருவமழை என்று ஒவ்வொரு பருவமழையின் போதும் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மழைக்கால நோய் பாதிப்புகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கிறது.

 

கடந்த ஆண்டு பொருத்தவரை அக்டோபர் ஆரம்பித்த டிசம்பர் இறுதி வரை பத்தாயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு,

 

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் என 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு மிகப்பெரிய அளவிலான நோய் பாதிப்புகள் கட்டுக்குள் வைக்கப்பட்டு இருக்கிறது.

 

 

2017 பொறுத்த வரை தமிழ்நாட்டின் அதிகமாக டெங்கு பாதிப்பு என்கின்ற வகையில் 23 ஆயிரத்து 294 பேருக்கு ஒரே ஆண்டில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு 65 பேர் மரணம் அடைந்தார்கள்.

 

அதேபோல் 2012 ஆம் ஆண்டில் 66 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலை இருந்தது.

 

அந்த வகையில் தொடர்ந்து 60 70 பேர் உயிரிழப்பு இருந்து வந்த நிலை உள்ளாட்சி நிர்வாகங்கள் ஊரக உள்ளாட்சி நகர்ப்புற உள்ளாட்சி ஆகிய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிற காரணத்தினால் டெங்கு பாதிப்பினால் ஏற்படுகிற உயிரிழப்புகளும் கட்டுக்குள் இருந்து வருகிறது.

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவ மழை அதனால் ஏற்படுகிற நோய் பாதிப்புகள் டெங்கு உன்னி காய்ச்சல், எலி காய்ச்சல் மஞ்சள் காமாலை மற்றும் INFLUENZAA காய்ச்சல் போன்ற காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து கண்டறியப்படும் பணிகளை மக்கள் நல்வாழ்வு துறையும் தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளும் தொடர்ந்து செய்து வருகிறது.

 

சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பொதுவாகவே அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அ

 

 

தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை துறை மேற்கொண்டு வருகிறது.

 

கடலூர், சென்னை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உன்னி காய்ச்சல் கண்டறியப்பட்டு இருக்கிறது.

 

எலி காய்ச்சலை பொருத்தவரை சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூரில் எலி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

 

மஞ்சள் காமாலை சென்னை, திருச்சி, தேனி போன்ற பகுதிகளில் மஞ்சள் காமாலை பாதிக்கப்படுபவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

 

சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் influenza பாதிப்புகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

ஜனவரி 1 தொடங்கி நேற்று வரை டெங்கு பாதிப்பு என்பது தமிழகத்தில் 6565 ஆக உள்ளது 390 பேர் பன்றிக்காய்ச்சல், 1481 பேர் எலிக்காய்ச்சல், மஞ்சள் காமாலை 1750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நோய்களால் இதுவரை உயிரிழப்புகள் எதுவுமே இல்லை.

 

டெங்கு பொறுத்தவரை காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் மருத்துவமனைக்கு அணுகாததன் காரணமாக அவர் உடல்களை நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் காரணமாகவும் மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

 

 

வரும் மாதங்களை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை எதிர்நோக்கி இருக்கக்கூடிய நிலையில் நோய் பாதிப்புகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலோடு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அமைப்பு இந்த பணியினை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.

 

பருவநிலை மாற்றங்களின் பொது ஏற்படுகிற பாதிப்புகளுக்கு மருத்துவ முகாம்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

 

தமிழகத்தை பொறுத்தவரை 476 நடமாடும் மருத்துவ குழுக்கள் தமிழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. நடமாடும் பள்ளி மருத்துவ குழுக்கள் 805 இருக்கிறது.

 

மருத்துவ முகாம்கள் தேவைப்படும் இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.

 

ஒரு பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும் ஆனால் அங்கு உடனடியாக மருத்துவ முகாம்கள் நடத்த நடத்தப்படும்.

 

2972 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல் கண்டவர்களின் அறிக்கை பெறப்பட்டு வருகிறது.


தமிழகத்தைப் பொறுத்தவரை டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைத்து கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு இதற்கென 22 ஆயிரத்து 384 தற்காலிக பணியாளர்கள் இதற்கிட நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

ஒரு மாத காலத்திற்குள் சென்னையில் அனைத்து துறை செயலாளர் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

 

தமிழகத்தை பொறுத்தவரை புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் 16,005 உள்ளது. இதற்கு தேவையான மருந்துகள் 51 ஆயிரத்து 748 கையிறுபில் உள்ளது.

 

தமிழகத்தில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் அவர்களாகவே தனியாக மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம்.

 

காய்ச்சல் பாதிப்பு தென்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் அடைய வேண்டும் மருத்துவமனைகளை அணுகி மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். அவசர உதவி தேவைப்பட்டால் தமிழ்நாட்டில் முதலமைச்சருடைய வழிகாட்டுதலோடு 14 108 போன்ற அவசர உதவிகளை நாட வேண்டும்.

 

கேரளா மற்றும் தமிழக எல்லைகளை பாதுகாப்பு பணியினை பொது சுகாதாரம் தன் தொடர்ச்சியாக ஈடுபட்டு இருக்கிறது.

 

 

போக்குவரத்து வாகனங்கள் எதுவாக இருந்தாலும் எல்லைகளை கடந்து வருகிற சாதாரண நடை பயணிகளாக இருந்தாலும் அனைவரிடமும் பரிசோதனை பணியானது தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது.

 

தமிழ்நாடு கேரளா இடைபட்ட ஐந்து இடங்களில் நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

 

அந்த வகையில் தமிழகத்தை பொறுத்த வரை நிபா வைரஸ்வாதிப்பு யாருக்கும் இல்லை.

Tags:
#Minister for Health and Family Welfare  # Ma. Subramanian  # Dengue  # Nipah Virus 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos