கொலை வழக்கில் வக்கீல்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

கொலை வழக்கில் வக்கீல்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!
By: No Source Posted On: July 25, 2024 View: 1731

கொலை வழக்கில் வக்கீல்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

 

ஜூலை 5-ம் தேதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.

 

 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள என 16பேர் வரையில் சம்பந்தப்பட்டு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

 

இதில் இரண்டு பெண்களும் அடங்குவர்.

 

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவர் போலீசாரின் என் கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

மேலும் இவ்வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் மணலி மாத்தூரை சேர்ந்த வக்கீல் சிவா என்பவரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

 

தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்தில் உடன் சிவா தொடர்பில் இருந்து உள்ளதாகவும்,

 

இவர் மூலம் கொலையாளிகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளளனர்.

 

கைது செய்யப்பட்ட சிவா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

தொடர்ந்து பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.

 

கைது செய்யப்பட்ட சிவா வீட்டிலிருந்து ரூ. 9 லட்சம் ரொக்கப்பணத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

இதனையடுத்து இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த வக்கீ்ல்கள் மற்றும் இவரையும் சேர்த்து வக்கீல்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

Tags:
#BSP Armstrong Case  # Lawyers  # Arrest  # BSP  # Mayawati  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos