அதிகார துஷ்பிரயோகம் - அண்ணாமலை கண்டனம்

அதிகார துஷ்பிரயோகம் - அண்ணாமலை கண்டனம்
By: No Source Posted On: July 25, 2024 View: 1608

அதிகார துஷ்பிரயோகம் - அண்ணாமலை கண்டனம்

 

தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனராக, ஹாசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 

தற்போது மூன்று ஆண்டுகள் கடந்ததும், அவரை துறை இயக்குனராக நியமித்திருக்கிறார்கள்.

 

ஹாசன் முகமது ஜின்னாவை இந்தப் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த ஆறு மாதங்களாக,

 

 

தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் இருந்திருக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின்.

 

தமிழகத்தில் எத்தனையோ திறமை வாய்ந்த மூத்த வழக்கறிஞர்கள், குற்ற வழக்குகள் துறை இணை/துணை இயக்குனர்கள் எனத் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கும்போது,

 

ஒட்டு மொத்த குற்ற வழக்குகள் துறையின் தலைவர் பொறுப்புக்கு, தங்களுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக அரசுப் பதவி வழங்கியிருப்பது,

 

முற்றிலும் தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

 

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதும்,

 

பல குற்றங்களில் தி.மு.க.வினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதும் வெளிப்படையாகத் தெரிய வரும் நிலையில்,

 

மாநிலத்தின் ஒட்டு மொத்த குற்ற வழக்குகளைக் கையாளும் முக்கியப் பொறுப்பில், மூன்று ஆண்டுகள் முன்பு வரை தி.மு.க. இளைஞரணித் துணைச் செயலாளராக இருந்த ஒருவரை நியமித்திருப்பது,

 

தி.மு.க.வின் நோக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

 

 

முதல்-அமைச்சர் ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்றால்,

 

அவரது கட்சியில் முக்கியப் பதவிகள் கொடுக்கலாம்.

 

அதை விடுத்து, பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில், இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:
#Annamalai  # BJP  # DMK  # MK Stalin 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos